Lionel Messi: லியோனல் மெஸ்ஸிக்கு அமெரிக்காவின் உயரிய விருது.. நேரில் வாங்க முடியாமல் போனது ஏன்?
ஹிலாரி கிளிண்டன் மற்றும் டென்சல் வாஷிங்டன் உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்கு ஜனாதிபதி பைடன் சுதந்திரப் பதக்கத்தை வழங்கினார்.
லியோனல் மெஸ்ஸிக்கு, சனிக்கிழமையன்று ஜனாதிபதி ஜோ பைடனால், அமெரிக்காவின் உயரிய விருதான ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இருப்பினும், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியால் கலந்து கொள்ள இயலவில்லை.
மெஸ்ஸியின் பிரதிநிதிகள் வெளியிட்ட அறிக்கையில், மெஸ்ஸிக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலைகள் இருந்ததாகக் கூறினர்.
அறிக்கை என்ன சொன்னது
அறிக்கையின்படி, “லியோவுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படும் என்று டிசம்பர் மாத இறுதியில் FIFA-வுக்கு வெள்ளை மாளிகை தெரிவித்தது, அவர்கள் கிளப்புக்குத் தெரிவித்தனர். இந்த அங்கீகாரத்தைப் பெறுவது மிகுந்த மரியாதைக்குரியது மற்றும் மிகுந்த பாக்கியம் என்று மெஸ்ஸி, கிளப் மூலம் வெள்ளை மாளிகைக்கு ஒரு கடிதம் அனுப்பினார், ஆனால் திட்டமிடல் முரண்பாடுகள் மற்றும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட சில பணிகள் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.