Virat kohli on Dhoni:தோனியால் நான் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்ந்ததில்லை - கோலி
என்னால் தோனிக்கும், அவரால் எனக்கும் எந்த தருணத்திலும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவானதில்லை. டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னர் அவர் மட்டும்தான் என்னை தொடர்பு கொண்ட என்று விராட் கோலி செய்தியாளர்களிடம் உருக்கமாக பேசினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. ஆனால் இந்தப் போட்டியில் சிறப்பாக பேட் செய்த கோலி 60 ரன்கள் விளாசினார். இருப்பினும் கடைசி கட்டத்தில் பெளலிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பியதால் இந்தியா தோல்வியுற்றது.
180 ரன்கள் அடித்து அதை கட்டுப்படுத்த முடியாத இந்திய அணியின் பெளலிங், பீல்டிங் மீது விமர்சனங்கள் முன்வைகப்பட்ட போதிலும், அடுத்தடுத்து இரண்டு அரைசதம் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் அவர் பார்முக்கு திரும்பியிருப்பது நிம்மதி அளித்திருப்பதாகவும் பலரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கோலி பல்வேறு விஷயங்களை உருக்கமாக பேசினார். அப்போது தோனிக்கும் தனக்குமான உறவு குறித்து அவர் கூறும்போது,
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து நாந் விலகிய பிறகு தோனி மட்டும் குறுஞ்செய்தி அனுப்பி என்னை தொடர்பு கொண்டார். எனது தொலைப்பேசி எண் பலரிடமும் உள்ளது. எனக்கான ஆலோசனைகளை பலரும் தொலைக்காட்சியில் வழங்குகதிறார்கள். ஆனால் யாரும் அந்த தருணத்தில் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
நம்மிடம் யாருக்கு பந்தமும், மரியாதையும் உள்ளதோ அவர்களிடமிருந்து நமக்கான ஆதரவு இதுபோன்ற தருணங்களில் வெளிபடும். அந்த வகையில் எனக்கும், தோனிக்கும் இடையேயான பாதுகாப்பு உணர்வு மேலோங்கியுள்ளது. எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் ஒருவருக்கொருவரிடம் எதுவும் தேவைப்படுவதில்லை.
என்னால் அவர் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உணரவில்லை, அதேபோல்தான் எனக்கும்.
நான் யாரிடமாவது ஒரு விஷயத்தை சொல்ல வேண்டுமானால் நேரடியாக சொல்லவிடுவேன். ஆனால் எனக்கு உதவி செய்வதாக உலகத்தின் முன் நின்று எனக்கு அறிவுரைகள் கூறினால் அதற்கு என்னிடம் மதிப்பு இருக்காது. நான் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என விரும்பினால், நேடியாக என்ன தொடர்பு கொள்ளலாம். நேர்மையாகவே நான் வாழ்ந்து வருகிறேன். நான் விளையாடும் வரை எனது விளையாட்டை நேர்மையாக விளையாடுவேன்
இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.
டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, தென்ஆப்பரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகுவதாக சமூக ஊடகம் மூலம் அறிவித்தார்.
அதற்கு முன்னதாக ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
டாபிக்ஸ்