தமிழ் செய்திகள்  /  Sports  /  Kim Garth Is An Irish Player Who Has Been Included In The Australian Women's Cricket Team

Kim Garth: அயர்லாந்த் அணிக்கு விளையாடியவர் ஆஸி., அணிக்கு தேர்வு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 06, 2022 09:36 AM IST

மும்பையில் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி , ஐந்து போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணியில் கிம் கார்த் இடம் பெற்றுள்ளார்.

கிம் காரத் - கோப்புபடம்
கிம் காரத் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

2010 ஆம் ஆண்டில் தன்னுடைய 14 வயதில் அயர்லாந்த் அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார் கிம் காரத். ஆல்ரவுண்டரான கிம் கார்த், இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி , ஐந்து போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணியில், தனக்கு இடம் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை அயர்லாந்தில் உள்ள தனது பெற்றோருக்கு உடனடியாக தெரிவிக்க விரும்பியுள்ளார் கிம்கார்த்.

‘‘அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். அந்த நேரத்தில் நான் அழைத்தால், அவர்கள் பதறக் கூடும். ஆனாலும் அந்த தகவலை தாமதப்படுத்தாமல் அவர்களிடம் பகிர நினைத்தேன்’’ என்று செய்தியாளர்களிடம் கூறுகையில் காரத் கூறியிருந்தார்.

‘‘ஆஸ்திரேலிய அணியின் தேசிய தேர்வாளர் ஷான் ஃப்ளெக்லர் இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னை அழைத்தார். நாங்கள் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு விளையாடிய மறுநாள் என்று நினைக்கிறேன், அன்று அவர் எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். ஆஸ்திரேலிய அணியில் என்னை தேர்வு செய்யும் அறிவிப்பு அங்கு நிகழ்ந்தது. அதை கேட்டு நான் உற்சாகமடைந்தேன், ஆச்சரியம் அடைந்தேன். தொழிலிலுக்காக நான் நாடு விட்டு நாடு நகர்ந்தேன். ஆனால், அதுவும் எனக்கு பயனுள்ளதாக அமைந்தது,’’

என்று செய்தியாளர் சந்திபபில் கார்த் கூறியிருந்தார்.

கடந்த ஜூன் 2020 இல் , அயர்லாந்து கிரிக்கெட்டிலிருந்து வெளியேறி விக்டோரியாவுக்குச் சென்று வாழ்வாதாரத்திற்காக கிரிக்கெட் விளையாடினார் காரத். ஆனால் அது எளிதான முடிவு அல்ல. அயர்லாந்துக்காக 34 ஒருநாள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் அதன் பின் விளையாடியிருக்க முடியாது.

உள்ளூர் போட்டியில் விளையாடிய கிம் காரத் - கோப்பு படம்
உள்ளூர் போட்டியில் விளையாடிய கிம் காரத் - கோப்பு படம்

‘‘அயர்லாந்து அணிக்காக விளையாடிவிட்டு, அதன் பின் அங்கிருந்து வெளியேறி உள்நாட்டு அணியில் விளையாடுயதால் நான் வாய்ப்பை இழந்தேன் என்று எனக்கு தெரியும். அதே நேரத்தில் இங்குள்ள உள்நாட்டு அமைப்பின் பலம், உள்ளூர் வீரர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை நான் அறிந்தேன். சிறந்த சர்வதேச வீரர்களை ஈர்த்ததால், உள்ளூர் வீரராக மாறுவதற்கு WBBL எனக்கு ஒரு பெரிய ஈர்ப்பாக இருந்தது.

ஆஸ்திரேலியாவில் கிரேடு கிரிக்கெட்டில் சில வருடங்கள் விளையாடியதால், பெண்கள் வாழும் சில வாழ்க்கை முறைகளையும், அன்றாடம் கிரிக்கெட் விளையாடுவதையும் நான் பார்த்திருக்கிறேன். இது உண்மையில் நான் செய்ய விரும்பிய ஒன்று.

நான் ஒரு பெரிய முடிவை எடுக்கும் போது எனக்கு 23 வயது என்று நினைக்கிறேன். குடும்பத்தை விட்டு வெளியேறுவது கடினமான முடிவு, ஆனால் இப்போது எனக்கு வருத்தம் இல்லை அயர்லாந்தில் அப்போது சிறந்த டிரா கிரிக்கெட்டை விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.

அயர்லாந்தின் ஒன்பது வருட சர்வதேச வாழ்க்கையில், 64 டி20 மற்றும் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடினேன். ஆனால், ஆஸ்திரேலியாவில் நான் விளையாடிய டி20 போட்டிகள் பெரிய பயனளித்தது. நான் அயர்லாந்திற்காக விளையாடும்போது, ​​நாங்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளோடு விளையாடினோம்.

கிம் கார்த் - கோப்பு படம்
கிம் கார்த் - கோப்பு படம்

சமீபத்திய ஆண்டுகளில் உள்நாட்டு கிரிக்கெட்டில் நான் சில நல்ல நிலையான ஆட்டங்களை வெளிப்படுத்தியதை போல் உணர்கிறேன். அடுத்த படியை எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் வேறு அணிக்காக விளையாட இருந்தாலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்,’’ என்று கார்த் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பிறகு, கார்த் 2020 முதல் விக்டோரியா உள்நாட்டு அணிக்காக 50 ஓவர் போட்டியான மகளிர் தேசிய கிரிக்கெட் லீக்கையும், பின்னர் 2020-21 இல் பெர்த் ஸ்கார்ச்சர்ஸிற்கான மகளிர் பிக் பாஷ் லீக்கையும் விளையாடினார், அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மெல்போர்ன் ஸ்டார்ஸுடன் விளையாடினார். செயல்பாட்டில், அவர் ஆஸ்திரேலியாவின் நிரந்தர இடத்தை பிடித்தார். மேலும் WBBL இல் உள்ளூர் வீரராக ஆனார்.

கார்த் இந்திய நிலைமைகளுக்கு புதியவர் அல்ல. 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அயர்லாந்து அணியில் அவர் ஒரு அங்கமாக இருந்தார்.

ஆஸ்திரேலிய லெவன் அணிக்குள் நுழைவது எளிதல்ல. அதே நேரத்தில் கார்த் தனது ஆஸ்திரேலிய அணியை, இந்தியா சுற்றுப்பயணத்தில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றால், அது அவருக்கு பெரிய மைல்கல்லாக அமையும் என்கிறார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்