ISL: ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை சிட்டிக்கு முதல் தோல்வி-கேரளா பிளாஸ்டர்ஸுக்கு 7வது வெற்றி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Isl: ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை சிட்டிக்கு முதல் தோல்வி-கேரளா பிளாஸ்டர்ஸுக்கு 7வது வெற்றி

ISL: ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை சிட்டிக்கு முதல் தோல்வி-கேரளா பிளாஸ்டர்ஸுக்கு 7வது வெற்றி

Manigandan K T HT Tamil
Dec 25, 2023 01:19 PM IST

கேரளா அணி அதன் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக வெற்றியை கொடுத்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சியில் நடந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய கேரளா பிளாஸ்டர்ஸ் வீரர்கள் (PTI Photo)
கேரள மாநிலம், கொச்சியில் நடந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய கேரளா பிளாஸ்டர்ஸ் வீரர்கள் (PTI Photo) (PTI)

இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் 2-0 என மும்பை சிட்டி எப்.சியை வீழ்த்தியது.

அணித்தலைவர் அட்ரியன் லூனா இல்லாத நிலையில் போராடும் என எதிர்பார்க்கப்பட்ட கேரளா அணி, அவர்களின் ஃபார்வேர்டு இரட்டையர்களான டிமிட்ரியோஸ் டயமண்டகோஸ் மற்றும் குவாமே பெப்ரா ஆகியோர் மும்பை அணியை வீழ்த்த உதவினர்.

டிமிட்ரியோஸ், பெப்ரா ஆகிய இரு வீரர்களும் மும்பை சிட்டி எஃப்சியின் பாதுகாப்பு அரணை தகர்த்து கோல் போட்டனர்.

டிமிட்ரியோஸ் 11வது நிமிடத்திலும், பெப்ரா 45வது நிமிடத்திலும் கோல் பதிவு செய்தனர்.

கடைசி வரை முயன்றும் மும்பை அணியால் கோல் எதுவும் பதிவு செய்ய முடியவில்லை.

ஆனால், முரண் என்னவென்றால் கால்பந்து மும்பை அணியின் வசமே 65 சதவீதம் இருந்தது. பந்தை கடத்தும் திறனையும் மும்பை அணியே நேற்று சிறப்பாக செய்திருக்கிறது.

ஆனால், அந்த அணியால் கோல் மட்டும் போட முடியாமல் போனது அந்த அணி ரசிகர்களுக்கு வருத்தமே. 11 ஆட்டங்களில் விளையாடிய கேரளாவுக்கு இது 7வது வெற்றியாகும். 2 ஆட்டங்களில் டிராவும், 2இல் தோல்வியும் கண்டிருக்கிறது கேரளா.

அதேநேரம், மும்பை அணிக்கு இது முதல் தோல்வி ஆகும். 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 5 இல் வெற்றியும், 4 இல் டிராவும் செய்துள்ளது.

இந்தப் போட்டியும் முடிவை தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் கோவா அணியுடன் புள்ளிகளை சமன் செய்துள்ளது கேரளா. இரு அணிகளும் 23 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

மோகன் பகான் 3வது இடத்திலும், 19 புள்ளிகளுடன் மும்பை சிட்டி 4வது இடத்திலும் இருக்கிறது.

ஒடிஸா 18 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது.சென்னையின் எஃப்சி12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. நாளை பஞ்சாப், ஒடிஸா இடையே கால்பந்து போட்டி டெல்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.