ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்!-கடுப்பாகிய அஸ்வின்
Ravichandran Ashwin: “உண்மை வேண்டுமா? ஹெட்லைன்ஸ் வேண்டுமா? ஆன்லைன் என்ன gambling (சூதாட்டம்) இருக்கு? ஆன்லைனால் தான் பசங்க விளையாட கிரவுண்டுக்கு வர மாட்டேன் என சொல்கிறீர்கள். அப்போது நடிகர் வடிவேலு மாதிரி கேட்கிறேன்.”
Gen Next - சென்னை மாநகராட்சி இணைந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தத் திட்டம் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அதில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "நான் அதை விளையாடுவதில்லை. எனக்கு அதை பற்றி கருத்து தெரிவிக்க விருப்பமில்லை" என்றார்.
ஆனாலும் செய்தியாளர்கள் தொடர்ந்து அதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் "உண்மை வேண்டுமா? ஹெட்லைன்ஸ் வேண்டுமா? ஆன்லைன் என்ன gambling (சூதாட்டம்) இருக்கு? ஆன்லைனால் தான் பசங்க விளையாட கிரவுண்டுக்கு வர மாட்டேன் என சொல்கிறீர்கள். அப்போது நடிகர் வடிவேலு மாதிரி கேட்கிறேன். மொபைல் போனை கண்டுபிடித்து யாரு? மொபைல் போனை தூக்கி வச்சிரலாமா? அப்படி வச்சிட்டா பசங்க கிரவுண்டுக்கு வந்துடுவாங்க சரியா?
பிரச்னைக்கான மூலக் காரணத்தை பாருங்க. லாட்டரி ஒரு காலத்தில் இருந்தது. அதை தடை செய்தார்கள். இதையும் தடை செய்துவிட்டார்களா? என செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார் அஸ்வின்.
தடை செய்துவிட்டார்கள் என செய்தியாளர்கள் பதிலளித்தனர்.
பின்னர், தடை செஞ்சிட்டாங்கன்னா விளையாடதீங்க என கூறினார் அஸ்வின்.
இணையவழி சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
தமிழகத்தில் இணையவழி சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அதற்கு தடை விதிக்க தமிழக சட்டசபையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்