எலைட் லிஸ்டில் இணைந்த ஜோ ரூட்! இதுவரை 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியல்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜோ ரூட். இந்தப் பட்டியலில் இணைந்த 14வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லாட்ர்ட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக இங்கிலாந்து அணி 277 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது முன்னாள் கேப்டன் ஜோ ரூட், தற்போதைய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பார்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இந்தப் போட்டியில் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை 118 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ரூட், 10015 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 26 சதங்களும், 53 அரைசதங்களும் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 254 ரன்கள் ஆகும்.
ரூட் 218 இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்களை கடந்து, மிகவும் குறைவான இன்னிங்ஸில் இந்த சாதனையை புரிந்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் 229வது இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். அத்துடன் குக்கை தொடர்ந்து இங்கிலாந்தின் இரண்டாவது வீரராக ஜோ ரூட் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் கடந்த வீரர்களின் பட்டியல்
1. சச்சின் டென்டுல்கர் (இந்தியாஃ - 15,921
2. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 13,378
3. ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 13,289
4. ராகுல் டிராவிட் (இந்தியா) - 13,288
5. அலஸ்டைர் குக் (இங்கிலாந்து) - 12,472
6. குமார சங்ககாரா (இலங்கை) - 12,400
7. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) - 11,953
8. ஷிவ்நரைன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) - 11,867
9. மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை) - 11,814
10. ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) - 11,174
11. ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா) - 10,927
12. சுனில் கவாஸ்கர் (இந்தியா) - 10,122
13. யூனிஸ் கான் (பாகிஸ்தான்) - 10,099
14. ஜோ ரூட் (இங்கிலாந்து) - 10,015*
இந்தப் பட்டியலில் உள்ள வீரர்களில் ஜோ ரூட் மட்டும் தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார். 31 வயதாகும் ஆவர் மேலும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட்டை தொடரும் பட்சத்தில் எலைட் பேட்ஸ்மேன்களின் பட்டியலான இதில் மேலும் முன்னேற்றம் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்