தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Dp Manu Fails Dope Test: ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி! தடகள சாம்பியன்ஷிப்பில் விலகிய ஈட்டி எறிதல் வீரர் டி.பி. மனு

DP Manu Fails Dope Test: ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி! தடகள சாம்பியன்ஷிப்பில் விலகிய ஈட்டி எறிதல் வீரர் டி.பி. மனு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 28, 2024 05:38 PM IST

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மூன்றாவது வீரராக தகுதி பெறுவார் என எதிர்பார்ப்பட்ட இளம் ஈட்டி எறிதல் வீரர் டி.பி. மனு ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளார். அத்துடன் தற்போது நடைபெறும் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்த டி.பி. மனு தடகள சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகல்
ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்த டி.பி. மனு தடகள சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகல்

ட்ரெண்டிங் செய்திகள்

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடத்திய ஊக்கமருந்து சோதனையில் பாசிடிவ் என முடிவு வந்த நிலையில் ஈட்டி எறிதல் வீரர் டி.பி.மனு, தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதில் சிக்கல்

இந்திய ஈட்டி எறிதலின் வளர்ந்து வரும் நட்சத்திரமாகக் காணப்படுகிறார் மனு. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்கு நேரடியாக தகுதி பெற வேண்டும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்ததுடன், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார். தற்போது ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்திருக்கும் இவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியாவில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்றபோது, மனு அனபோலிக் ஸ்டீராய்டு பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் மேற்கொண்ட ஊக்கமருந்து பரிசோதனையில் பாசிட்டிவ் என்று அறியப்பட்டது.

"இந்தியாவில் நடந்த போட்டியின் போது நாடா சோதனையில் அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது" என்று இது பற்றி விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தியா சார்பில் மூன்றாவது வீரர்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தரவரிசையில் 15வது இடத்திலும், ஒலிம்பிக்குக்கு தகுதி சுற்றில் தகுதி பெற 32 ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராகவும் உள்ளார்.

ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சமாக மூன்று ஈட்டி எறிதல் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம். ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் ஜெனா ஆகிய இரண்டு இந்திய ஈட்டி எறிதல் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் 87.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஜெனா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் பின்னர் டி.பி.மனு மூலம் இந்தியா தனது மூன்றாவது வீரருக்கான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

2022 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப்பில் 84.35 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார் டி.பி.மனு. இந்த ஆண்டு, அவர் மூன்று போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பெங்களூருவில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸில் விளையாடினார்.

புவனேஸ்வரில் நடந்த பெடரேஷன் கோப்பையில், டி.பி.மனு 2.06 மீட்டர் தூரமும், கடந்த மாதம் தைவானில் நடந்த போட்டியில் 81.58 மீட்டர் தூரமும் எறிந்தார்.

இந்திய விளையாட்டு ஆணையம் இலக்காக ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் கீழ், டி.பி. மனு மார்ச் மாதம் போட்செப்ஸ்ட்ரூமில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழக உயர் செயல்திறன் மையத்தில் ஈட்டி எறிதலுக்கான பயிற்சி பெற்றார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம்

24 வயதான டி.பி. மனு, 2023இல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். அத்துடன் இந்த வெற்றிக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்ட டி.பி. மனு, அங்கு அவர் 84.14 மீட்டர் எறிந்து ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான ஈட்டி எறிதலில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 21 பேர் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிஷோர் ஜெனா, டோக்கியோ ஒலிம்பியன் ஷிவ்பால் சிங் மற்றும் காயத்திலிருந்து திரும்பி வரும் ரோஹித் யாதவ் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.