James Naismith Memorial Day: கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கிய ஜேம்ஸ் நைஸ்மித்தின் நினைவு நாள் இன்று
கனடாவில் 1861ம் ஆண்டு பிறந்த நைஸ்மித், 1939ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி காலமானார். இவரது நினைவு நாள் இன்று.
ஜேம்ஸ் நைஸ்மித் ஒரு கனடா-அமெரிக்க உடற்கல்வியாளர், மருத்துவர், கிறிஸ்தவ மதகுரு மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளர் ஆவார். இவர் தான் கூடைப்பந்து விளையாட்டின் கண்டுபிடிப்பாளராக அறியப்பட்டவர்.
அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு, அவர் அசல் கூடைப்பந்து விதி புத்தகத்தை எழுதினார். கன்சாஸ் பல்கலைக்கழக கூடைப்பந்து திட்டத்தை நிறுவினார். 1904 ஆம் ஆண்டில் கூடைப்பந்து ஒரு ஒலிம்பிக் விளையாட்டாகவும், 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் அதிகாரப்பூர்வ நிகழ்வாகவும், தேசிய இன்விடேஷன் போட்டி (1938) மற்றும் NCAA போட்டி (1939) சேர்க்கப்பட்டதை கண்டு மகிழ்ந்தார்.
கனடாவில் 1861ம் ஆண்டு பிறந்த நைஸ்மித், 1939ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி காலமானார். இவரது நினைவு நாள் இன்று.
நைஸ்மித் 1890 ஆம் ஆண்டு வரை மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி பயிற்றுவித்தார். அதற்கு முன்பு 1890 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டுக்கு சென்றார், அங்கு 1891 ஆம் ஆண்டில் அவர் சர்வதேச YMCA பயிற்சிப் பள்ளியில் கற்பிக்கும் போது கூடைப்பந்து விளையாட்டை வடிவமைத்தார். கூடைப்பந்தைக் கண்டுபிடித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, நைஸ்மித் 1898 இல் டென்வரில் மருத்துவப் பட்டம் பெற்றார்.
நைஸ்மித் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறந்த கால்பந்து வீரராக இருந்தார், குளிர்காலத்தில் வெளியே சென்று கால்பந்து விளையாட முடியாத நிலையில், உட்புற விளையாட்டை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதன் விளைவாக பிறந்தது தான் கூடைப்பந்து.
ஜூன் 20, 1894 இல், நைஸ்மித் மௌட் இ. ஷெர்மனை (1870-1937) ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸில் மணந்தார். இந்த தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
இன்று உலகின் பல்வேறு நாடுகளில் கூடைப்பந்து பிரபலமான விளையாட்டாக இருந்து வருகிறது.
டாபிக்ஸ்