MI vs GT: இந்த சீசனில் மூன்றாவது சதம்! புதிய சாதனை படைத்த சுப்மன் கில்
இந்த சீசனின் மூன்றாவது சதத்தை அடித்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஒபனிங் பேட்ஸமேனான சுப்மன் கில். அத்துடன் ப்ளேஆஃப் போட்டிகளில் முதல் முறையாக சதமடித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபயர் போட்டி குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அகமதபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட் செய்து வருகிறது.
மழை காரணமாக அரை மணி நேரம் தாமதமாக இந்தப் போட்டி தொடங்கியது. இதையடுத்து குஜராத் அணியில் உச்சகட்ட பார்மில் இருக்கும் ஓபனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில் 49 பந்துகளில் சதமடித்துள்ளார்.
இந்த சீசனில் மட்டும் அவர் தனது மூன்றாவது சதத்தை அடித்துள்ளார். கடைசியாக விளையாடி 4 போட்டிகளில் கில் மூன்று சதங்களை அடித்துள்ளார்.
அத்துடன் ப்ளேஆஃப் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதமாக இது அமைந்துள்ளது.
இதுவரை ப்ளேஆஃப் போட்டிகளில் வீரேந்தர் சேவாக், ஷேன் வாட்சன், விருதிமான் சாஹா, முரளி விஜய் ஆகியோர் அடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து சுப்மன் கில் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.
சதமடித்த பிறகும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில், ப்ளேஆஃப் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த சேவாக்கின் 122 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
ஆட்டத்தின் 16.5வது ஓவரில் மத்வால் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து டிம் டேவிட் வசமே பிடிபட்டார். கில் தனது அதிரடியான இன்னிங்ஸில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை பறக்க விட்டு 60 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக, கில் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோர்டன் வீசிய பந்தில் வந்த கேட்ச் வாய்ப்பை டிம் டேவிட் தவறவிட்டார். இந்த வாய்ப்பை நன்கு பயண்படுத்தி கொண்ட கில் சதமடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9