தமிழ் செய்திகள்  /  Sports  /  Srh Beats Kkr By 23 Runs And Moves 7th Position In Points Table

அதிரடி காட்டிய ராணா, ரிங்கு! கொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்திய சன் ரைசர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 14, 2023 11:38 PM IST

KKR vs SRH: கேப்டன் நிதிஷ் ராணா, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹீரோயிசம் காட்டிய ரிங்கு சிங், நாரயண் ஜெகதீசன் ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பங்களிப்பு தராத நிலையில் சன் ரைசர்ஸ் விதித்த இமாலாய இலக்கான 229 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் கொல்கத்தா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிங்கு சிங்
பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிங்கு சிங் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலிருந்து 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவரில் 228 ரன்கள் குவித்துள்ளது. ரூ. 13. 25 கோடி ஏலத்தில் வாங்கப்பட்ட ஹாரி ப்ரூக், 2023 சீசனின் முதல் சதமடித்தார். 55 பந்துகளுக்கு 100 ரன்கள் எடுத்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரஹமனுல்லா குர்பாஸ் டக் அவுட்டானார். இதைத்தொடர்ந்து இம்பேக்ட் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 10 ரன்னில் அவுட்டாகி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சென்றார். அவரைத்தொடர்ந்து வந்த சுனில் நரேனும் முதல் பந்திலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

மிகப் பெரிய சேஸிங்கில் 20 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறிய நிலையில் கேப்டன் நிதிஷ் ராணா, தொடக்க பேட்ஸ்மேன் நாரயண் ஜெகதீசன் ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து ரன் குவிப்பில் ஈடுபட தொடங்கினார்.

ஜெகதீசன் 36 ரன்கள் அடித்து அவுட்டானார். பின்னர் கொல்கத்தாவுக்காக பல வெற்றிகளை தேடி தந்த ஆண்ட்ரே ரசல் களமிறங்கி 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட்டான நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஹீரோயிசம் நிகழ்த்திய ரிங்கு சிங் - கேப்டன் நிதிஷ் ராணா இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ராணா அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில், 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது தேவைப்படும் ரன்ரேட்டும் அதிகமாக இருந்த நிலையில் அதிரடியாக பேட் செய்த ரிங்கு சிங் அரைசதம் அடித்தார்.

அதேபோல் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக பேட் செய்த ஷர்துல் தாக்கூர் 12 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங் 58 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சன் ரைசரஸ் பெளலர்களில் மார்கோ ஜான்சென், மயங்க் மார்கண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். யார்க்கர் கிங் நடராஜன் 4 ஓவரில் 54 ரன்கள் என வாரி வழங்கினார்.

சதமடித்த ஹாரி ப்ரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

WhatsApp channel

டாபிக்ஸ்