Tamil News  /  விளையாட்டு  /  ஐபிஎல்  /  அட்டவணை

ஐபிஎல் 2023 அட்டவணை

அடுத்து

மார்ச் இறுதியில் தொடங்கும் ஐபிஎல் போட்டியில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறும். நான்கு பிளேஆஃப் ஆட்டங்கள் விளையாடப்படும். பாதுகாப்பு வளையத்துக்குள் (bio-bubble) தான் போட்டிகள் நடத்தப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 ஆட்டங்கள் நடத்தப்படும். பிற்பகல் 3.30 மணிக்கு ஓர் ஆட்டமும் இரவு 7.30 மணிக்கு மற்றொரு ஆட்டமும் நடைபெறும். லக்னோ, சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூர், குவாஹாட்டி, அகமதாபாத், மொஹாலி, ஜெய்ப்பூர், ஐதராபாத் ஆகிய 11 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். குஜராத் டைட்டன்ஸ்-சிஎஸ்கே மோதும் முதல் ஆட்டம் மார்ச் 31ஆம் தேதி நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டம் மே 21ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் டைட்ன்ஸ் அணியும் மோதுகின்றன. மே 21அன்று முதல் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்திலும், இரவு நடைபெறும் 2வது ஆட்டம் பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகியுள்ளது.