தமிழ் செய்திகள்  /  Sports  /  Sam Curran Captaining Pbks After Injured Dawan Rested And Lsg Batting

தவானுக்கு காயம்! 10 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் வீரர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 15, 2023 07:53 PM IST

LSG vs PBKS: தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், அந்த அணியின் கேப்டனாக இளம் வீரர் சாம் கரண் கேப்டனாக செயல்படுகிறார்.

டாஸ் நிகழ்வில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், பஞ்சாப் அணியின் ஸ்டான்டிங் கேப்டன் சாம் கரன்
டாஸ் நிகழ்வில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், பஞ்சாப் அணியின் ஸ்டான்டிங் கேப்டன் சாம் கரன்

ட்ரெண்டிங் செய்திகள்

பஞ்சாப் கேப்டனாகவும், அணியின் பார்மில் இருக்கும் பேட்ஸ்மேனுமான ஷிகர் தவான் இன்றைய போட்டியில் விளையாடாமல் இருப்பது மிகப் பெரிய பின்னடைவாகவே அமைந்துள்ளது. பஞ்சாப் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டும் களமிறங்குகிறார்கள்.

அதர்வா டைடே, ஹர்ப்ரீத் பாட்டியா ஆகியோ ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இம்பேக்ட் வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், நாதன் எல்லிஸ், மோஹித் ரதி, ரிஷி தவான் ஆகியோர் உள்ளனர்.

லக்னெள அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட்க்கு பதிலாக யுத்வீர் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இம்பேக்ட் வீரர்களாக அமித் மிஷ்ரா, ஜெயதேவ் உனத்கட், கிருஷ்ணப்பா கெளதம், ப்ரீராக் மங்கட், டேனியல் சாம்ஸ் ஆகியோர் உள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இன்றைய போட்டியில் களமிறங்கும் ஹர்ப்ரீத் சிங் பாட்யா 10 ஆண்டுகள் 332 கழித்து ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குகிறார். இவர் இதற்கு முன்னதாக 2012 மே 29ஆம் தேதி ஐபிஎல் போட்டியில் கடைசியாக விளையாடினார்.

பஞ்சாப் அணி தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லக்னெள அணி ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் கடைசியாக உள்ளூரில் விளையாடிய போட்டியிலும் சன் ரைசர்ஸ் அணியை வீழ்ததியது.

சொந்த மண்ணில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ள லக்னெள அணி, இன்று உள்ளூரில் நடைபெறும் போட்டியில் ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கலாம்.

லக்னெள அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடித்து வருகிறது. பஞ்சாப் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் பஞ்சாப் அணி நான்காவது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்