MI vs GT: மழைக்கு பின் தொடங்கய நீயா நானா போட்டி! குஜராத்துக்கு 2, மும்பையில் ஒரு மாற்றம்
பைனலுக்கான நீயா நானா ரேஸாக அமைந்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனாலும் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
ஐபிஎல் 2023 தொடரின் ப்ளேஆஃப் சுற்றில், குவாலிபயர் 2 போட்டி குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. மழை காரணமாக
இந்த போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பெளலிங்கை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் ஹிரிதிக் ஷோக்கினுக்கு பதிலாக குமார் கார்த்திகேயா சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் குஜராத் அணியில் இலங்கை ஆல்ரவுண்டர் ஷனகா, இளம் பெளலர் நல்கண்டேவுக்கு பதிலாக ஜோஷ் லிட்டில், தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மும்பை அணியில் இம்பேக்ட் வீரர்களாக நேகல் வதீரா, ரமன்தீப் சிங், விஷ்ணு வினோத், ராகவ் கோயல், சந்தீப் வாரியர் ஆகியோர் உள்ளனர்.
குஜராத் அணியில் இம்பேக்ட் வீரர்களாக ஜோஷ் லிட்டில், ஸ்ரீகர் பரத், ஓடியன் ஸ்மித், சாய் கிஷோர், ஷிவம் மாவி ஆகியோர் உள்ளார்கள்.
பைனலுக்கான நீயா நானா போட்டியாக அமைந்திருக்கும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.