KKR vs LSG: பூரான் அதிரடி பினிஷ்! சிஎஸ்கேவை முந்த லக்னோவுக்கு ஒரு சான்ஸ்
சிஎஸ்கே அணியைவிட புள்ளிப்பட்டியலில் முன்னேற வேண்டுமானால் கொல்கத்தா அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்று விடலாம்.

அதிரடியாக பேட் செய்து பந்து பவுண்டரிக்கு பறக்க விட்ட பூரான் (PTI)
ஐபிஎல் 2023 தொடரின் 68வது போட்டி கொல்கத்தா நைட ரைட்ரஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கரண் ஷர்மா 8 ரன்னில் வெளியேறினார். இவரை தொடர்ந்து பேட் செய்த பீரராக் மன்கட் 26, மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் குவைன்டன் டி காக் 28 ரன்கள் எடுத்தனர்.
லக்னோ அணியின் கடந்த போட்டியில் பேட்டிங்கில் ஹீரோவாக ஜொலித்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 0, க்ருணால் பாண்ட்யா 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினர். மிடில் ஆர்டரில் பேட் செய்த ஆயுஷ் பதோனி 25, விக்கெட் சரிவை தடுத்து 25 ரன்கள் எடுத்தார்.