தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mi Vs Gt: பயத்தை காட்டிய மும்பை பேட்ஸ்மேன்கள்! தண்ணி காட்டிய ஒரே குஜராத் பெளலர் - மீண்டும் சிஎஸ்கேவுடன் பைனலில் மோதல்

MI vs GT: பயத்தை காட்டிய மும்பை பேட்ஸ்மேன்கள்! தண்ணி காட்டிய ஒரே குஜராத் பெளலர் - மீண்டும் சிஎஸ்கேவுடன் பைனலில் மோதல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 27, 2023 12:20 AM IST

ஒரு புறம் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் திலக் வர்மா, சூர்யா குமார் யாதவ் ஆகியோரின் ஆட்டம் நம்பிக்கை அளிக்கும் விதமாக மும்பை ரசிகர்களுக்கு அமைந்தது. ஆனால் கடைசி நேரத்தில் டுவிஸ்ட் கொடுத்த குஜராத் பெளலர் மோஹித் ஷர்மா தனது அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய விக்கெட்டான சூர்யகுமாரை கிளீன் போல்டாக்கிய மகிழ்ச்சியில் குஜராத் பெளலர் மோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய விக்கெட்டான சூர்யகுமாரை கிளீன் போல்டாக்கிய மகிழ்ச்சியில் குஜராத் பெளலர் மோஹித் ஷர்மா (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் சுப்மன் கில் அதிரடியால் 233 ரன்கள் குவித்தது. இந்த ரன்னை சேஸ் செய்தால் சாதனையாக அமையும் என்ற நிலையில் பேட் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக வதேரா - ரோஹித் ஷர்மா களமிறங்கினர்.

முதல் ஓவரிலேயே 4 ரன்கள் எடுத்த நிலையில் வதேரா அவுட்டானார். இவரை தொடர்ந்து ரோிஹித் ஷர்மாவும் 8 ரன் எடுத்த நிலையில் அவுட்டாக, முதல் 3 ஓவருக்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.

இதன் பின்னர் பேட் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஆகியோர் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். திலக் வர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளாக அடித்த ரன்களை சேர்த்தால். 14 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இவரது Accelerationஐ கெட்டியாக பிடித்துக்கொண்ட சூர்ய குமார், தனது பாணியில் ரன்களை குவிக்க தொடங்கினார். முன்னதாக ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ஹர்திக் வீசிய பந்தில் கையில் அடிபட்டு வெளியேறி கேமரூன் க்ரீன், திலக் வர்மா விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கினார்.

சூர்யகுமார் - க்ரீன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். க்ரீன் 30 ரன்கள் எடுத்து அவுட்டாக, சூர்ய குமார் தனது அதிரடியை தொடர்ந்தார். தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்பட ரன்களை குவித்து வந்த சூர்ய குமார் யாதவ் விக்கெட்டை மோஹித் ஷர்மா தூக்கினார்.

மும்பை அணி பெளலிங் செய்தபோது, ஜோர்டன் கை மூட்டு பகுதி இஷான் கிஷனில் கண் அருகே தெரியாமல் பட்டதால் இஷான் கிஷன் வெளியேறி அவருக்கு பதிலாக விஷ்ணு வினோத் கன்கஷன் சப்ஸ்ட்யூட் வீரராக அணியில் இடம்பிடித்தார். ஆனால் அவர் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை வெளிப்படுத்தாமல் 5 ரன்னில் மோஹித் ஷர்மாவிடம் வீழ்ந்தனார்.

மும்பை அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டிம் டேவிட் 2 ரன்னில் வெளியேற, அவர்களின் தோல்வி உறுதியானது.

கடைசி கட்டத்தில் டுவிஸ்ட் செய்த மோஹித் ஷர்மா, வெறும் 10 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியை நாக்அவுட் செய்தார்.

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை இதே நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்