LSG vs PBKS: கேஎல் ராகுலின் ஒன் மேன் ஷோ! பஞ்சாப்புக்கு 160 ரன்கள் இலக்கு
யாருமே கம்பெனி கொடுக்காத போதிலும் ஒற்றை ஆளாக நிலைத்து பேட்டிங் செய்த கேஎல் ராகுலின் ஆட்டத்தால் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 159 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் 21வது போட்டி லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே லக்னெள நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பங்கேற்காத நிலையில், சாம் கரன் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
லக்னெள அணி கேப்டனும் தொடக்க பேட்ஸ்மேனுமான கேஎல் ராகுல் - கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர். மூன்று சிக்ஸர்களை பறக்க விட்ட மேயர்ஸ் 29 ரன்களில் அவுட்டானார்.
இதைத்தொடர்ந்து 100வது போட்டியில் களமிறங்கிய தீபக் ஹூடா 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின் பேட் செய்த க்ருணால் பாண்ட்யா 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
லக்னெள அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்து வந்த நிக்கோலஸ் பூரான் இன்றைய போட்டியில் டக் அவுட்டானார். இதையடுத்து பேட் செய்த ஸ்டோய்னிஸ் 15 ரன்களில் வெளியேறினார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும், தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேஎல் ராகுல் அரைசதம் விளாசினார். ஆட்டத்தின் 19வது ஓவர் வரை பேட் செய்த ராகுல் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
20 ஓவர் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் பெளலர்களில் இன்றைய போட்டியின் கேப்டன் சாம் கரன் 3, ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், சிகந்தர் ராசா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
டாபிக்ஸ்