HT Sports Special: ஐபிஎல் 2023 சீசனில் சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்ஸ் லிஸ்ட்!
Chennai Super Kings: ஓர் அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு பவுலர்ஸும் முக்கியம்.
16வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் ஆனது. இதன்மூலம், சிஎஸ்கே 5வது முறையாக சாம்பியனானது.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஒரு சிக்ஸ், 1 ஃபோர் விளாசி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் ஜடேஜா.
ஓர் அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு பவுலர்ஸும் முக்கியம்.
பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங், கேப்டன்ஷிப் என அனைத்தும் சிறப்பாக இருந்தாலே அந்த அணி சாம்பியன் அணிதான்.
அந்த வகையில் அனைத்தும் சிறப்பாக அமையப் பெற்றதாக இருந்தது சிஎஸ்கே.
சிஎஸ்கேவுக்கு பக்கபலமாக பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை.
இந்த சீசனில் ஆரம்ப ஓவர்களை தீபக் சாஹரும், துஷார் தேஷ்பாண்டேவும் வீசி அசத்தினால், இறுதி கட்ட ஓவர்களில் பதிரானா சிறப்பாக செயல்பட்டார்.
முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்களித்த பவுலர்கள் லிஸ்ட்டை பார்ப்போம்.
துஷார் தேஷ்பாண்டே
இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது துஷார் தேஷ்பாண்டே. மும்பையில் பிறந்தவரான துஷார் தேஷ்பாண்டே, டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு விளையாடியிருக்கிறார். இந்த முறை சிஎஸ்கேவுக்கு வாங்கப்பட்டார்.
16 ஆட்டங்களில் விளையாடிய அவர், 21 விக்கெட்டுகளை எடுத்தார். சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் துஷார்.
மொத்தம் 56.5 ஓவர்களை வீசிய அவர், 565 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் 3/45.
ரவீந்திர ஜடேஜா
சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஜடேஜா, பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு 20 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார்.
மொத்தம் 57 ஓவர்களை வீசியிருக்கும் அவர், 431 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் இந்த சீசனில் 3/20.
மதீஷா பதிரானா
12 ஆட்டங்களில் விளையாடியுள்ள இலங்கையைச் சேர்ந்த பவுலர் பதிரானா 19 விக்கெட்டுகளை கைப்பற்றி 3வது இடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 46.2 ஓவர்கள் வீசி 371 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் 3/15.
தீபக் சாஹார்
தீபக் சாஹார், காயத்திலிருந்து மீண்டு வந்து இப்போட்டியில் பங்கேற்றார். 10 ஆட்டங்களில் விளையாடி, 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மொத்தம் 34 ஓவர்கள் வீசி 297 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் 3/22 ஆகும்.
மஹீஷ் தீக்ஷனா
இலங்கையைச் சேர்ந்த மஹீஷ் தீக்ஷனா, 13 ஆட்டங்களில் விளையாடி, 11 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். மொத்தம் 49 ஓவர்கள் வீசி 392 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் 2/23.
மொயீன் அலி
இங்கிலாந்து வீரரான மொயீன் அலி, 15 ஆட்டங்களில் விளையாடி, 9 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இவர் மொத்தம் 26 ஓவர்களை வீசி 195 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் 4/26.
ஆகாஷ் சிங், மிட்செல் சான்ட்னர், ராஜ்வர்தன், சிசன்டா மகலா ஆகியோர் முறையே 5, 3, 3, 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
டாபிக்ஸ்