Harry Brook: ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்.. என் சதத்தை ரசிக்கின்றாள்’ -ஹாரி புரூக் நெகிழ்ச்சி!
IPL2023: ‘நான் சதம் அடித்த இந்த மைதானத்தில் என்னுடைய காதலி இங்கே இருக்கிறார்’
டாடா ஐபிஎல் 2023 நேற்றை ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் 4 விக்கெட்களை இழந்து 228 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் துவக்க வீரர் ஹாரி புரூக், அதிரடியாக ஆடி 55 பந்துகளில் சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய ஹாரி புரூக்கில் ருத்ர தாண்டவம், சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமானது.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கொல்கத்தா அணி, 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து பேட்டியளித்த ஹாரி புரூக் கூறுகையில், சுவாரஸ்யமான ஒரு தகவலை பகிர்ந்தார். அது,
‘‘நான் சதம் அடித்த இந்த மைதானத்தில் என்னுடைய காதலி இங்கே இருக்கிறார். மைதானத்தில் இருந்த என் குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக இங்கிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் அனைவரும் என்னுடைய இந்த சதத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்’’ ஹாரி புரூக் தெரிவித்தார்.
மேலும் இந்த வெற்றிக்குப் பின் டிரஸ்ஸிங் ரூமில், ஹாரி புரூக் இனிப்புகளை உண்டு, சக வீரர்களுடன் வெற்றியை கொண்டாடினார்.
டாபிக்ஸ்