தமிழ் செய்திகள்  /  Sports  /  Harry Brook Hits This Season First Century Which Helps Srh To Post Second Highest Total As 228 Runs

2023 சீசனின் முதல் சதமடித்த சன்ரைசர்ஸ் வீரர்! கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 14, 2023 09:21 PM IST

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, மூன்று போட்டிகளில் சொதப்பலாக பேட்டிங் செய்து வந்த ஹாரி ப்ரூக் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியில் கலக்கி, 2023 சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

ஐபிஎல் 2023 சீசனின் முதல் சதத்தை அடித்தார் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக்
ஐபிஎல் 2023 சீசனின் முதல் சதத்தை அடித்தார் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

மயங்க் அகர்வால் தனது மோசமான பேட்டிங் பார்மை இன்றைய போட்டியிலும தொடர்ந்தார். 9 ரன்னில் அவர் வெளியேற, அவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த ராகுல் திரிபாதியும் 9 ரன்னில் அவுட்டானார்.

இந்த இருவரின் விக்கெட்டையும் கொல்கத்தா ஆல்ரவுண்டர் ஆன்ட்ரே ரசல் தூக்கினார். இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டான நிலையில், களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் பொறுப்பாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் முதல் மூன்று போட்டிகளில் பெரிதாக ரன் குவிப்பில் ஈடுபடாத ஹாரி ப்ரூக் தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 55 பந்துகளில் சதமடித்தார். 

இதன்மூலம் 2023 சீசனில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். சிறப்பாக பேட் செய்து வந்த கேப்டன் மார்க்ரம் அரைசதம் எடுத்து 50 ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்தபடியாக வந்த அபிஷேக் ஷர்மாவும் 17 பந்துகளில் விரைவாக 32 ரன்கள் அடித்து சிறப்பான கேமியோ இன்னிங்ஸ் விளையாடினார்.

கடைசி கட்டத்தில் பேட் செய்த க்ளாசன் 6 பந்துகளில் 16 ரன்களஅ எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து இன்றைய போட்டியில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்துள்ளது. 

கொல்கத்தா வீரர் ஆண்ட்ரு ரசல் பந்து வீசும்போது காயமடைந்தார். ஆட்டத்தின் 19வது ஓவர் முதல் பந்தில் காயத்தால் களத்தை விட்டு அவர் வெளியேறிய நிலையில்,  அந்த ஓவரின் மீதமிருந்து 5 பந்துகளை ஷர்துல் தாகூர் வீசினார்.

கொல்கத்தா பெளலர்களில் ரசல் 3, வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இந்த போட்டியில் சதமடித்த இங்கிலாந்தை சேர்ந்தவரான ஹாரி ப்ரூக், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் ரூ. 13. 25 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் அணி. மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போன வீரர் என்பதால் அவர் மீது மிகப் பெரியா எதிரபார்ப்பு இருந்தது. ஆனால் அவர் முதல் மூன்று போட்டிகளில் விளையாடி மொத்தமாக 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சன் ரைசர்ஸ் அணி வாய்ப்பு வழங்கிய நிலையில் இன்றைய போட்டியில் ரன் குவிப்பில் ஈடுபட்டு இந்த சீசனின் முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்