தமிழ் செய்திகள்  /  Sports  /  Former Indian Batter Congratulates Dhoni On Csk Fifth Ipl Title Lauds Jadeja Performance

Jadeja: 'மேட்ச்-வின்னர்' ஜடேஜாவை புகழ்ந்து தள்ளிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Manigandan K T HT Tamil
May 30, 2023 05:55 PM IST

MS Dhoni: ‘எனது பேவரைட் அணியாக குஜராத் டைட்டன்ஸுக்கு லக் இல்லை. விளையாட்டில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.’

சிஎஸ்கேவுக்கு வின்னிங் ஷாட் அடித்த ஜடேஜா
சிஎஸ்கேவுக்கு வின்னிங் ஷாட் அடித்த ஜடேஜா (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையொட்டி, தோனியின் நண்பரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரருமான யுவராஜ் சிங் வாழ்த்து கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், தோனிக்கு வாழ்த்துகள். 5 வது முறையாக வென்றிருக்கிறீர்கள். இதுவொரு டீம் முயற்சியை காட்டுகிறது. அனைத்து வீரர்களும் ஒத்துழைப்பது இதற்கு முக்கியம். ஜடேஜா நீங்கள் கலக்கிவிட்டீர்கள். எனது பேவரைட் அணியாக குஜராத் டைட்டன்ஸுக்கு லக் இல்லை. விளையாட்டில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். நீங்கள் பெருமைப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார் யுவராஜ் சிங்.

முன்னதாக, டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது சிஎஸ்கே. முதலில் விளையாடிய குஜராத் 214 ரன்களை குவித்தது. எனினும், மழை பெய்ததால் சிஎஸ்கேவுக்கு 171 ரன்கள் 15 ஓவர்களில் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ஷிவம் துபே, அம்பதி ராயுடு என அனைவருமே சிறந்த பேட்டிங்கை கொடுத்தாலும் ஜடேஜா கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இதன்காரணமாக ஜடேஜாவை எல்லாரும் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகியிருக்கிறது. 2023 ஐபிஎல் சீசனை சிஎஸ்கே டிஎல்எஸ் முறையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஜடேஜா ஒரு சிக்ஸர், 1 பவுண்டரியை விளாசி அசத்தினார்.

வின்னிங் ஷாட் அடித்ததும் அவர் நேராக துல்லிக் குதித்தபடியோ கேப்டன் தோனியை நோக்கி ஓடினார். தோனி இந்த ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், அதிருப்தியாக இருந்தார்.

இதையடுத்து, கடைசி பந்தில் ஜெயித்ததை அடுத்து அவரிடம் அருகில் இருந்தவர் ஜெயித்துவிட்டோம் என கூறினார். இதையடுத்து கண்களில் கண்ணீர் ததும்ப அவர் எழுந்த மைதானத்திற்கு வந்தார். அப்போது நேரடியாக ஜடஜோ அவரிடம் வந்து ஜெயித்துவிட்டோம் எனக் கூற, அவரை அப்படியே தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த லீக்கில் ஜடேஜா ஆட்டமிழந்த பிறகே, தோனி களமிறங்குவார். ஆனால், பைனல் ஆட்டத்தில் தோனி முன்கூட்டியே களமிறங்கினார். எப்போதும் ஜடேஜா ஆட்டமிழந்தால் தோனி களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால், இந்த ஆட்டம் அப்படியே மாறியது. ஜடஜோ ஜெயித்துக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். போட்டி முடிந்த பிறகு, ரசிகர்களின் அன்பே எங்களை ஜெயிக்க வைத்தது என்றார் ஜடேஜா.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்