தமிழ் செய்திகள்  /  Sports  /  Don't Think Many Can Hit Shots Like That Mike Hussey On Ambati Rayudu Batting

Mike Hussey: மெதுவாக வீசப்படும் பந்தில் இப்படியொரு ஷாட் எதிர்பார்க்கல-ராயுடுவை புகழ்ந்த ஹஸ்ஸி

Manigandan K T HT Tamil
May 30, 2023 03:16 PM IST

Ambati Rayudu: ‘13வது ஓவரில் பேக் ஃபூட்டில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் அம்பதி ராயுடு. மெதுவாக வீசப்படும் ஒரு பந்தில் அவ்வாறு சிக்ஸர் அடிக்க கிரிக்கெட் உலகில் யாரால் முடியும் என எனக்கு தெரியவில்லை.’

சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி, சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு
சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி, சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்றைய பைனல் போட்டியுடன் அம்பதி ராயுடு ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 13வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார்.

ஆனால், வந்த வேகத்தில் 8 பந்துகளில் 19 ரன்களை விளாசினார். அதில் 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடங்கும்.

அவர் ஆட்டமிழந்த போதிலும், சக சிஎஸ்கே வீரர்கள் ஆவரை வாழ்த்தினர். அம்பதி ராயுடுவை பாராட்டி மைக் ஹஸ்ஸி பேசியதாவது:

13வது ஓவரில் பேக் ஃபூட்டில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் அம்பதி ராயுடு. மெதுவாக வீசப்படும் ஒரு பந்தில் அவ்வாறு சிக்ஸர் அடிக்க கிரிக்கெட் உலகில் யாரால் முடியும் என எனக்கு தெரியவில்லை. வீரர்களிடம் மன அழுத்தம் இல்லாமல் கேப்டன் தோனி பார்த்துக் கொண்டார்.

அவர் சிறந்த மனிதநேயம் மிக்க மனிதர். இளம் வீரர்களிடம் இருக்கும் அழுத்தங்களை உள்வாங்கிக் கொண்டு அவர்களை சிறப்பாக விளையாட விடுவார்.

தோனியின் கேப்டன்ஷிப் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார் மைக் ஹஸ்ஸி.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் அம்பதி ராயுடு. அவர் மொத்தம் 204 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். 14 சீசன்களில் விளையாடி, 11 பிளே-ஆஃப் சுற்றுகள், 8 பைனல்களில் பங்கேற்றிருக்கிறார். இவர் இடம்பெற்ற அணிகள் 5 கோப்பைகள் வென்றிருந்தன.

‘‘என் குடும்பத்தாருக்கும், என் தந்தைக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை" என்றார் அம்பதி ராயுடு.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்