Dwayne Bravo: தோனிக்காகவே அமைந்த புதிய விதிமுறை! அடுத்த சீசனிலும் 100% விளையாடுவார் - அடித்து சொல்லும் பிராவோ
தோனி தனது கிரிக்கெட் கேரியரை தொடர்வதற்கு ஏற்பவே புதிய விதிமுறையான இம்பேக்ட் வீரர் அமைந்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் அடுத்த சீசனிலும் அவர் 100 சதவீதம் விளையாடுவார் என கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பிராவோ.
ஐபிஎல் 2023 தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதன் மூலம் ஐபிஎல் தொடர்களில் 10வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனிக்கு தற்போது 41 வயது ஆகும் நிலையில், இதுதான் அவரது கடைசி சீசன் என்ற பரவலாக பேச்சு நிலவுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோதும் புதிராகவே அவர் பதில் அளித்து வருகிறார்.
கடைசியாக விளையாடிய குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய பிறகு தோனியிடம் அடுத்த சீசனில் மீண்டும் உங்களை சென்னையில் பார்க்கலமா என்ற கேட்டபோது, "இதுபற்றி முடிவு செய்ய போதுமான கால அவகாசம் உள்ளது. 8 முதல் 9 மாதங்கள் வரை நேரம் உள்ளது. டிசம்பரில் தான் ஏலம் நடைபெறுகிறது. அந்த தலைவலியை இப்போதே ஏன் எடுக்க வேண்டும்.
நான் வீட்டை விட்டு வெளியேறி 4 மாதங்கள் ஆகிறது. ஜனவரியில் வீட்டை விட்டு வந்த மார்ச் மாதம் முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
நான் சிஎஸ்கேவுக்காக எப்போதும் வருவேன். வீரராகவோ இல்லை வேறொரு ரூபத்திலோ அணியில் இருப்பேன்" என்றார்.
இதன்மூலம் சிஎஸ்கே அணியுடனான தனது உறவு நீண்ட காலம் நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்திய தோனி, அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் என சொல்லாமல் சொல்லியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், தோனி அடுத்த சீசனிலும் கண்டிப்பாக விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் பலரும் அடுத்தடுத்து கூறி வருகின்றனர். அவர் இந்த சீசனில் வெற்றி பெற்றால் அடுத்த சீசனில் விளையாடுவேன் என தோனி தன்னிடம் கூறியதாக கடந்த வாரம் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தோனி அடுத்த சீசனிலும் 100 சதவீதம் விளையாவார் என சிஎஸ்கே அணியின் டெத் பெளலிங் ஸ்பெஷலிஸ்டாக இருந்த டுவெய்ன் பிராவா கூறியுள்ளார். இதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரரான பிராவோ கூறியதாவது:
"நூறு சதவீதம் தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார். குறிப்பாக இம்பேக்ட் வீரர் விதிமுறை அவருக்காக அமைக்கப்பட்டதாக உள்ளது. இது அவரது கிரிக்கெட் கேரியரை நீடிக்கும் என நம்பலாம். தோனியின் பேட்டிங் மிகவும் ஆழாமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபே மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கும் வல்லமை கொண்ட வீரர்களாக உள்ளார்கள். எனவே இதை வைத்து பார்க்கையில் தோனியிடம் பெரிதான எதிர்பார்ப்பு ஏதும் இருக்காது. அணிக்கு அழுத்தமான சூழ்நிலை ஏற்படும்போது தனது அமைதியை நிலைநாட்டுவதுதான் தோனிக்கு இருக்கும் தனித்தன்மை"
இவ்வாறு அவர் கூறினார்.
டுவெய்ன் பிராவோ தற்போது சிஎஸ்கே அணியின் பெளலிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் பட்டை தீட்ட இளம் பெளலர்கள் சிஎஸ்கே அணி இளம் பெளலர்கள் முன்னேற்றத்தை அடைந்து வருகிறார்க