Tamil News  /  Sports  /  Anil Kumble Praises Akash Madhwal And Welcomes Him In 5 For 5 Club
சிறந்த பெளலிங்கில் அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்திருக்கும் ஆகாஷ் மத்வால்

Akash Madhwal: கும்ப்ளேவின் 15 ஆண்டு கால சாதனையை சமன் செய்த மும்பை பெளலர் ஆகாஷ் மத்வால்

25 May 2023, 12:14 ISTMuthu Vinayagam Kosalairaman
25 May 2023, 12:14 IST

ஐபிஎல் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளாக நீடித்து வந்த அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால்.

ஐபிஎல் 2023 சீசனில் எலிமிணேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி குவாலிபயர் 2 சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. மும்பை அணி பெற்ற வெற்றிக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது.

லக்னோ அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஆயுஷ் பதோனி, அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரான் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி லக்னோ அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

இந்த போட்டியில் வெறும் 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் மும்பை அணிக்காக மட்டுமல்லாமல், ப்ளேஆஃப் போட்டிகளிலும் சிறந்த பெளலிங்கை பதிவு செய்தார்.

இதற்கு முன்னதாக ஐபிஎல் 2009 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் அனில் கும்ப்ளே 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஐபிஎல் போட்டிகளில் இதுவரை சிறந்த பந்து வீச்சாக இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து கும்ப்ளேவின் இந்த சாதனையை 15 ஆண்டுகள் கழித்து, மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளரான மத்வால் சமன் செய்துள்ளார்.

சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் மத்வாலுக்கு அனில் கும்ப்ளேவும் தனது டுவிட்டரில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

|#+|

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற மத்வால் கூறியதாவது:

"எனது வாய்ப்புக்காக காத்திருந்தேன். என்ஜினியரிங் படித்திருந்தாலும் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட நான் 2018இல் இருந்து கடுமையாக உழைத்து வருகிறேன். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவேன் என நம்புகிறேன்" என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசனில் பெளலிங் சரியாக அமையாமலேயே இருந்து வந்தது. பவர்புஃல் பேட்டிங் வரிசையை கொண்டிருந்த அந்த அணி சரியான பெளலிங் இல்லாத காரணத்தால் ஆரம்கட்டத்தில் தோல்விகளை தழுவியது.

தற்போது ஆகாஷ் மத்வாலின் சிறப்பான செயல்பாடு காரணமாக சரியான நேரத்தில் மும்பை அணி பெளலிங்கிலும் எழுச்சி பெற்றுள்ளது. குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியனஸ் வரும் வெள்ளிக்கிழமை மோதவுள்ளன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சிஎஸ்கேவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்