IPL: கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் பதிவு செய்த வீரர்
Jos Buttler: கடந்த ஆண்டு வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோற்றது. இறுதி ஆட்டத்தில் கூட பட்லர் 35 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆனால், அந்த அணி மட்டுமல்லாமல் அதிக கவனம் பெற்றார் ஒரு வீரர். அவர் தான் ஜோஸ் பட்லர். இங்கிலாந்து அணியின் வீரரான ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
அந்தத் தொடரில் அதிக ரன்களை விரட்டியது ஜோஸ் பட்லர் தான். ஆரஞ்சு கேப் அவர் வசமே இருந்தது.
இறுதி ஆட்டத்துக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமானபோது முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு இதுவரை சாம்பியன் பட்டமே வெல்லாமல் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோற்றது. இறுதி ஆட்டத்தில் கூட பட்லர் 35 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார்.
சென்ற தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பைனல் வரை முன்னேறுவதற்கு முக்கியக் காரணமாக திகழ்ந்தவர் பட்லர்தான். அந்தத் தொடரில் அவர் 18 ஆட்டங்கள், 83 பவுண்டரி கள் விளாசினார்.
மொத்தம் 864 ரன்களை குவித்தார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கே.எல்.ராகுல், சென்ற ஆண்டில் 15 ஆட்டங்களில் விளையாடி 616 ரன்களை எடுத்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர் குவின்டன் டி காக் 15 ஆட்டங்களில் விளையாடி 508 ரன்களும், குஜராத் ஜெயன்ட்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா 487 ரன்களும் எடுத்துள்ளனர்.
சுப்மன் கில் (483 ரன்கள்), டேவிட் மில்லர் (481 ரன்கள்), பாஃப் டு பிளெஸ்ஸிஸ் (468 ரன்கள்), ஷிகர் தவன் (460 ரன்கள்), சஞ்சு சாம்சன் (458 ரன்கள்), தீபக் ஹூடா (451 ரன்கள்) பதிவு செய்துள்ளனர்.
பட்லரின் முக்கிய பலங்களில் ஒன்று வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடும் அவரது திறமை.
அவரது அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது இலக்கை துரத்தினாலும், அவர் சூழ்நிலைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை சரிசெய்து அதற்கேற்ப ரன்களை எடுக்க முடிந்தது.
அவர் சில சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடினார். குறிப்பாக போட்டியின் ஆரம்ப பகுதியில், அவர் விரைவாக விளையாடி ஸ்கோர்களை பதிவு செய்தார்.
இந்த ஆண்டு யார் அதிக ஸ்கோர்களை பதிவு செய்வார்கள் என்று பார்ப்போம்.