IPL 2022: ராயல் சேலஞ்சர்ஸ் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 54 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஹதராபாத் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பெங்களூரு அணி கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதன்படி பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக விராட் கோஹ்லி டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
கோஹ்லி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் ஆர்சிபி அணியின் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. இதனையடுத்து டூ பிளெஸ்ஸி உடன் ஜோடி சேர்ந்தார் ராஜத் பட்டிடார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்டிடார் 38 பந்துகளை சந்தித்து 48 ரன்கள் எடுத்திருந்த போது சுச்சித் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதன் பின்னர் களத்துக்கு வந்த மேக்ஸ்வெல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 24 பந்துகளில் 33 ரன்கள் விளாசிய மேக்ஸ்வெல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உதவியுடன் இந்த ரன்களை எடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 30 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்கள் எடுத்தது.
நிலைத்து நின்று ஆடிய டூ பிளெஸ்ஸிஸ் 73 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உதவியுடன் இந்த ரன்களை அவர் விளாசினார்.
ஹைதராபாத் அணி தரப்பில் ஜெகதீஸ் 2 விக்கெட், கார்த்திக் தியாகி ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது.
சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் ஷர்மா, கேப்டன் வில்லியம்சன் இருவரும் டக் அவுட்டாகினர். வில்லியம்சன் ஒரு பந்தைகூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் ஆனதுதான் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது ஆரம்பித்தது சரிவு. இதன்பின்னர் வந்த சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து நடையைக்கட்டினர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராகுல் த்ரிப்பாட்டி மட்டுமே சிறப்பாக விளையாடினார். அவர் 37 பந்துகளை சந்தித்து 58 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும்.
பெங்களூரு அணியின் வணிந்து ஹசரங்கா ஐந்து விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்