INDvsNZ 2nd ODI:‘சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க’ 108 ரன்னில் நியூசி., ஆல் அவுட்!
NewZealand 1st Innings: எளிய இலக்கான 109 ரன்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எட்டும் பட்சத்தில் இந்தியா இந்த தொடரை கைப்பற்றும். அதற்கான வாய்ப்பு இந்தியாவிற்கு அதிகமாகவே உள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இரண்டாவது ஒரு நாள்போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்து வருகிறது. டாஸ்வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. நியூசி., தரப்பில் அலன் மற்றும் கன்வே ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதல் ஓவரிலே நியூசி., அடிவேரை அசைத்து பார்த்தார் முகமது ஷமி. அலனை கிளீன் போல்டு ஆக்கி அவுரை டக் அவுட் ஆக்கினார். அதைத் தொடர்ந்து நிக்கோலஸை 2 ரன்களில் முகமது சிராஜ் ஆட்டமிழக்கச் செய்தார். அவரை தொடர்ந்து கன்வேவை 7 ரன்களின் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்கச் செய்தார்.
தொடர்ந்து மூன்று விக்கெட்டுகள் விழ, அதன் பின் அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் 2 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதே வழியில் கேப்டன் லதமும் 1 ரன்னில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு ஆளானது. 15 ரன்கள் கூட எட்டாத நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின் பிலிப்ஸ், பேர்ஸ்வெல் ஜோடி இணைந்தது. கடந்த போட்டியில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய போர்ஸ்வெல், இந்த முறை 22 ரன்களில் முகமது ஷமி பந்தில் நடையை கட்டினார்.
அதன் பின் வந்த சான்ட்னர் 27 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்ததால் 36 ரன்கள் எடுத்த பிலிப்ஸூம் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த டெய்லண்டர்களான பெர்குஷன் 1 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்திலும், டிக்னர் 2 ரன்னில் குல்தீப் யாதவ் இடமும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 2 ரன்கள் எடுத்த ஷிப்லி ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி, 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த ரன்களே அந்த அணி எட்டுமா என்கிற கேள்வி ஒரு கட்டத்தில் இருந்த போது, அணியின் அதிகபட்சமாக பிலிப்ஸ் 36 ரன்கள், சான்ட்னர் 27 ரன்கள், போர்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்ததுமே அந்த அணி 3 டிஜிட் ரன் சேர்க்க காரணமானது.
இந்திய பவுலர்கள் இன்று அனலாக இருந்தார்கள். குறிப்பாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிராஜ், தாகூர், குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கோடு இந்தியா விளையாட உள்ளது.
எளிய இலக்கான 109 ரன்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எட்டும் பட்சத்தில் இந்தியா இந்த தொடரை கைப்பற்றும். அதற்கான வாய்ப்பு இந்தியாவிற்கு அதிகமாகவே உள்ளது.