இந்தோனேஷியா ஓபன் 2025: காலிறுதிக்கு நுழைந்த சாத்விக் - சிராக் ஜோடி! வெளியேறிய பி.வி. சிந்து
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  இந்தோனேஷியா ஓபன் 2025: காலிறுதிக்கு நுழைந்த சாத்விக் - சிராக் ஜோடி! வெளியேறிய பி.வி. சிந்து

இந்தோனேஷியா ஓபன் 2025: காலிறுதிக்கு நுழைந்த சாத்விக் - சிராக் ஜோடி! வெளியேறிய பி.வி. சிந்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 05, 2025 11:00 PM IST

டென்மார்க் ஜோடியை வீழ்த்திய இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து ஆகியோர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வெளியேறினர்.

இந்தோனேஷியா ஓபன் 2025: காலிறுதிக்கு நுழைந்த சாத்விக் - சிராக் ஜோடி! வெளியேறிய பி.வி. சிந்து
இந்தோனேஷியா ஓபன் 2025: காலிறுதிக்கு நுழைந்த சாத்விக் - சிராக் ஜோடி! வெளியேறிய பி.வி. சிந்து

காலிறுதியில் சாத்விக் - சிராக் ஜோடி

BWF சூப்பர் 1000 போட்டியில் அங்கமாக இருக்கும் இந்த தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில்

சாத்விக் - சிராக் ஜோடி டென்மார்க்கின் ராஸ்மஸ் கஜேர் மற்றும் ஃபிரடெரிக் சோகார்ட் ஜோடியை 16-21, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. ஒரு மணி நேரம் எட்டு நிமிடங்கள் இந்த போட்டி நீடித்த நிலையில் இந்தியா ஜோடி தொடக்க செட்டில் தோல்வி அடைந்த போதிலும், அடுத்த இரண்டு செட்களில் கம்பேக் கொடுத்தது.

பி.வி. சிந்து தோல்வி

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து, அடுத்த சுற்றில் தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்கை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த போட்டியில் தோல்வியடைந்த சிந்து சிறப்பாகத் தொடங்கி 10-16 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முதல் ஆட்டத்தை கைப்பற்றினார். இருப்பினும், இரண்டாவது ஆட்டத்தில் சோச்சுவோங் உறுதியாக பதிலளித்தார், 21-10 என்ற கணக்கில் போட்டியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்பு 10 புள்ளிகள் முன்னிலை பெற்றார்.

வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது ஆட்டத்தில் இருவரும் போராட்டத்தை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இருப்பினும் தாய்லாந்து வீராங்கனை 21-18 என புள்ளிக்கணக்கில் வெற்றி நிலையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுடன் பி.வி. சிந்து வெளியேறினார்.

இரட்டையர் பிரிவில் தோல்வி

பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி 13-21, 22-24 என்ற கணக்கில் ஜப்பானின் யூகி ஃபுகுஷிமா மற்றும் மயூ மாட்சுமோட்டோ ஜோடியிடம் தோல்வியடைந்தது. இந்த ஜோடி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுடன் வெளியேறியது

கலப்பு இரட்டையர் பிரிவில், சதீஷ் கருணாகரன் மற்றும் ஆத்யா வரியாத் ஜோடி தாய்லாந்தின் டெச்சாபோல் புவாரன்குரோ மற்றும் சுபிசாரா பாவ்சம்பிரான் ஜோடியிடம் நேரடி செட்களில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் 21-7, 21-12 என மோசமான புள்ளிகளை இந்திய ஜோடி பெற்றது. மொத்தம் 25 நிமிடங்களே இந்த ஆட்டம் நீடித்தது.

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்

1982 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியாவுக்காக முதல் பட்டத்தை 2009ஆம் ஆண்டில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சாய்னா நேவால் வென்றார். இதைத்தொடர்ந்து 2010, 2012 என மூன்று பட்டங்களை சாய்னா நேவால் வென்றுள்ளார்.

இதன் பின்னர் 2017இல் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார். கடைசியாக 2023ஆம் ஆண்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் ஜோடி பட்டம் வென்றது. இந்த தொடரில் இதுவரை இந்தியா 5 பட்டங்களை வென்றுள்ளது.