Indian Cricketer: இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் விளையாடிய பிளேயர்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Indian Cricketer: இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் விளையாடிய பிளேயர்!

Indian Cricketer: இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் விளையாடிய பிளேயர்!

Manigandan K T HT Tamil
Published Mar 16, 2023 06:09 AM IST

Iftikhar Ali Khan Pataudi: இவரது மகன் மன்சூர் அலி கான் பட்டோடியும் இந்திய அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஃப்திகர் அலி கான் பட்டோடி
இஃப்திகர் அலி கான் பட்டோடி

இவர் ஓர் இளவரசர் ஆவார். சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் 1946ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்த இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார் I.A.K. பட்டோடி (Iftikhar Ali Khan Pataudi).

இவரது மகன் மன்சூரும் இந்திய அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

I.A.K. பட்டோடி, இங்கிலாந்து அணிக்காக 1932 முதல் 1934ஆம் ஆண்டு வரை விளையாடியிருக்கிறார். அந்த வகையில் இரு நாட்டு அணிக்காக விளையாடி குறிப்பிட்ட சில வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

பட்டோடி நவாப் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இவர் பட்டோடியை ஆட்சி செய்து வந்தார். சுதந்திரத்திற்கு பல்வேறு சலுகைகளை இந்திய அரசிடம் இருந்து அனுபவித்து வந்தார் பட்டோடி. பட்டோடியின் நவாப் என்ற பெயரையும் அவருக்கு இந்திய அரசு வழங்கியது.

அப்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் தான். இவர் மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 199 ரன்களை பதிவு செய்திருக்கிறார்.

ஒரு சதம் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 102.

மாரடைப்பு ஏற்பட்டு 1952ஆம் ஆண்டு I.A.K பட்டோடி காலமானார்.

தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சயிஃப் அலி கானின் தாத்தா தான் இந்த இப்திகார் அலி கான் பட்டோடி என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும்.