HBD Renuka Yadav: பால்காரி டூ இந்திய ஹாக்கி வீராங்கனை..! சத்தீஸ்கரில் இருந்து ஒலிம்பிக் விளையாடிய முதல் பெண் வீராங்கனை
சத்தீஸ்கரில் இருந்து இந்தியா ஹாக்கி அணியில் ஒலிம்பிக் விளையாடிய முதல் பெண் வீராங்கனையாக இருந்து வருபவர் ரேணுகா யாதவ். இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்த இவர், தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் டிஎஸ்பியாகவும் உள்ளார்.

சத்தீஸ்கரில் இருந்து ஒலிம்பிக் விளையாடிய முதல் பெண் வீராங்கனை
இந்தியாவின் ஹாக்கி நர்சரி என்று அழைக்கப்படும் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம் ஹாக்கி வீராங்கனை ரேணுகா யாதவ். சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்ற முதல் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமைக்குரியவராக உள்ளார். அத்துடன் சத்தீஸ்கர் மாநிலத்தே சேர்ந்த ஒரே ஒலிம்பிக் வீராங்கனையாகவும் திகழ்கிறார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு 2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் விளையாட இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றது. இந்த அணியில் இடம்பிடித்த வீராங்கனையாக ரேணுகா யாதவ் திகழ்ந்தார்.
பால்காரி டூ ஹாக்கி வீராங்கனை
தனது சொந்த ஊரில் வீடு வீடாக சைக்களில் சென்று பால் விற்பனை செய்பவராக இருந்துள்ளார் ரேணுகா யாதவ். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவரது பெற்றோர்கள் வீட்டு வேலை செய்பவர்களாக இருந்துள்ளனர்.