தமிழ் செய்திகள்  /  Sports  /  India Finalise Squads For World Test Championship Final

World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. இந்திய வீரர்கள் விபரம் இதோ..!

Karthikeyan S HT Tamil
May 29, 2023 09:59 AM IST

World Test Championship 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்போட்டி முடிவடைந்த உடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ம் தேதி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இடம் பெற இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹிக் சர்மா தலைமையில் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வீரர்கள் விபரம் இதோ..!

1.ரோஹித் சர்மா (கேப்டன்)

2.சுப்மன் கில்

3.புஜாரா

4.விராட் கோஹ்லி

5.ரஹானே

6.ஜெய்ஸ்வால்

7.பரத்

8.அஸ்வின்

9.ஜடேஜா

10.ஹர்ஷத் பட்டீல்

11.ஷர்துல் தாக்குர்

12.எம்.குமார்

13.ஷமி

14.சிராஜ்

15.உமேஷ் யாதவ்

16.உனாகட்

17.இஷான் கிஷான்

18.சூர்யகுமார் யாதவ்

ஏற்கனவே விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சில வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. அடிடாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ஜெர்ஸி நீல வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய பயிற்சி ஜெர்சியை வீரர்கள், பயிற்சியாளர்கள் அணிந்து இருக்கும் புகைப்படத்தையும் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்