தமிழ் செய்திகள்  /  Sports  /  Ind Vs Nz: Nz Win The Toss, Batting, Bowling?

Ind vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கா, பவுலிங்கா? இந்திய அணியில் மாற்றம்

Manigandan K T HT Tamil
Jan 24, 2023 01:05 PM IST

இந்தியா-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்தூரில் தொடங்குகிறது.

டாஸ் போடப்பட்ட போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா, நியூசி., கேப்டன் டாம் லாதம்
டாஸ் போடப்பட்ட போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா, நியூசி., கேப்டன் டாம் லாதம் (ANI )

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், இன்றைய ஆட்டம் சம்பிரதய ஆட்டமாகவே இந்தியாவுக்கு இருக்கும். அதேநேரம், இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவிய டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, கடைசி ஒரு நாள் ஆட்டத்திலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், இந்த ஆட்டத்தில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.

ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

அணியில் மாற்றம்

இந்த ஆட்டத்தில் முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் பெஞ்ச்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். சஹல், உம்ரான் மாலிக் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3-0 என தொடரை முழுமையாக கைபற்றுவதோடு இல்லாமல் ஒரு நாள் புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தை பிடிக்கும்.

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 686 ரன்கள் குவித்தன. இதன் பின்னர் ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மொத்தமாக 219 ரன்களே எடுக்கப்பட்டன.

இந்த இரண்டு போட்டிகள் நிகழ்ந்த ஒற்றுமையான விஷயமாக நியூசிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டம் உள்ளது. 350 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டியபோது டாப் 5 பேட்ஸ்மேன்கள் 101 ரன்கள் மட்டுமே குவித்தனர்.

அதேபோல் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வெறும் 15 ரன்களுக்கு டாப் 5 பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறியது. கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் டாம் லதாம் தலைமையில் விளையாடி வரும் நியூசிலாந்து அணியில் டெவோன் கான்வே, பின் அலென், நிக்கோல்ஸ், டேரி மச்சல் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் இருந்தும் தொடர்ந்து இரண்டு முறை சொதப்பி இருப்பது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்