தமிழ் செய்திகள்  /  Sports  /  Ind Vs Nz 3rd T20: Arshdeep And Siraj Restricts Newzealand To 160 Runs

ind vs nz 3rd t20: பெளலர்களின் சூப்பர் பினிஷ்! இந்தியாவுக்கு டார்கெட் 161 ரன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 22, 2022 02:29 PM IST

கான்வே, பிலிப்ஸ் ஆகியோரின் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை தவிர மற்ற நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 190க்கும் மேல் செல்ல வேண்டிய ஸ்கோரை, இந்திய பெளலர்கள் சிறப்பான பந்து வீச்சால் 160 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.

இந்திய பெளலர்களின் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் நியூசிலாந்து பேட்ஸ்மேன் கான்வே
இந்திய பெளலர்களின் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் நியூசிலாந்து பேட்ஸ்மேன் கான்வே

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், சமன் செய்யும் உறுதியுடன் நியூசிலாந்தும் மூன்றாவது டி20 போட்டியில் களமிறங்கின.

நேப்பியர் மெக்லின் பார்க் மைதானத்தில் நடைபெற இருந்த இந்தப் போட்டி மழை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. மழையால் ஏற்பட்ட ஈரப்பதத்தால் பேட்டர்கள் ரன் குவிக்க சற்று சிரமம் அடையலாம் என கூறப்பட்ட நிலையில், டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பார்மில் இருந்த ஓபனிங் பேட்ஸ்மேன் பின் ஆலென் விக்கெட்டை ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே தூக்கினார் இந்திய இளம் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இவருக்கு அடுத்தபடியாக வில்லியம்சனின் மாற்று வீரராக களமிறக்கப்பட்ட மார்க் சாப்மேனும் 12 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், தொடக்க பேட்ஸ்மேன் கான்வேயுடன், பிலிப்ஸ் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதனால் விக்கெட் சரிவும் தடுக்கப்பட்டு மெதுவாக அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களையும் இரு பேட்ஸ்மேன்களும் பறக்க விட்ட நிலையில், அரைசதத்தை பூர்த்தி செய்தனர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். பிலிப்ஸ் 54 ரன்களில் சிராஜ் பந்தில் அவுட்டானார். நன்கு பேட் செய்து வந்த கான்வே 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது விக்கெட்டையும் அர்ஷ்தீப் தூக்கினார்.

இதன்பின்னர் கடைசி கட்டத்தில் நியூசிலாந்த பேட்ஸ்மேன்களை ரன் குவிப்பில் ஈடுபட முடியாமல் கட்டுப்படுத்தினர். ஆட்டத்தின் 19வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச அந்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து 19.4 ஓவரில் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளைும் இழந்தது. இந்திய பெளலர்களில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்