Tamil News  /  Sports  /  Ind Vs Nz 3rd Odi: India Look To Clinch Series 3-0 And Looks For Top Spot In Odi Ranking
மூன்றாவது ஒரு நாள் போட்டியை முன்னாக தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் இந்தியா, நியூசிலாந்து வீரர்கள்
மூன்றாவது ஒரு நாள் போட்டியை முன்னாக தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் இந்தியா, நியூசிலாந்து வீரர்கள்

Ind vs Nz 3rd Odi:முதல் இடம் பிடிக்க வாய்ப்பு!தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா?

24 January 2023, 6:20 ISTMuthu Vinayagam Kosalairaman
24 January 2023, 6:20 IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3-0 என தொடரை முழுமையாக கைபற்றுவதோடு இல்லாமல் ஒரு நாள் புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தை பிடிக்கும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என முழுமையாக இந்தியா அணி கைபற்றியது. இதைத்தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா அணி தொடரை 3-0 என முழுமையாக வெல்லும் பட்சத்தில் ஒரு நாள் புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும்.

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 686 ரன்கள் குவித்தன. இதன் பின்னர் ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மொத்தமாக 219 ரன்களே எடுக்கப்பட்டன.

இந்த இரண்டு போட்டிகள் நிகழ்ந்த ஒற்றுமையான விஷயமாக நியூசிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டம் உள்ளது. 350 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டியபோது டாப் 5 பேட்ஸ்மேன்கள் 101 ரன்கள் மட்டுமே குவித்தனர்.

அதேபோல் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வெறும் 15 ரன்களுக்கு டாப் 5 பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறியது. கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் டாம் லதாம் தலைமையில் விளையாடி வரும் நியூசிலாந்து அணியில் டெவோன் கான்வே, பின் அலென், நிக்கோல்ஸ், டேரி மச்சல் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் இருந்தும் தொடர்ந்து இரண்டு முறை சொதப்பி இருப்பது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ரன் குவிப்புக்கு சாதகமாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் இந்தூர் ஸ்டேடியத்தில் நியூசிலாந்த டாப் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்கள் ரன் குவிப்பில் ஈடுபடும்பட்சத்தில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றியை பெறும் வாய்ப்பு உருவாகலாம்.

இந்தியாவை பொறுத்தவரை ஐபிஎல் தொடருக்கு முன்பு விளையாடும் கடைசி ஒரு நாள் போட்டியாக இந்த போட்டி அமைகிறது. இதற்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதத்தில் விளையாடவுள்ளது.

எனவே ஆண்டில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்வதை கருத்தில் கொண்டு இந்திய வீரர்கள் விளையாடும் நிலையும் உள்ளார்கள்.

பிட்ச் எப்படி?

இந்திய மைதானங்களில் சிறிதாக இருக்கும் மைதானங்களில் ஒன்றாக இருக்கும் இந்தூர ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாகவே இருந்துள்ளது. கடைசியாக இங்கு நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது. இருப்பினும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மட்டும் 243 ரன்கள் குவித்தனர்.

அதேபோல் டி20 போட்டியில் தென்ஆப்பரிக்காவுக்கு எதிராக இந்தியா அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் தென்ஆப்பரிக்கா பேட்ஸ்மேன் ரிலீ ரோசோவ் சதமடித்தார்

டாபிக்ஸ்