தமிழ் செய்திகள்  /  Sports  /  Ind Vs Ban 1st Test: India In Command With Bangladesh Chasing 513 Target

Ind vs Ban 1st test: கில், புஜாரா சதம்! வங்கதேசத்துக்கு 513 ரன்கள் இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 16, 2022 04:52 PM IST

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில், புஜாரா ஆகியோர் சதமடித்த நிலையில் 258/2 ரன்களில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 513 ரன்களை வங்கதேசத்துக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா (இடது), சுப்மன் கில் (வலது)
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா (இடது), சுப்மன் கில் (வலது) (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் 23 ரன்களில் அவுட்டாக, இளம் பேட்ஸ்மேனாக சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் புஜாராவும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க இருவரும் சதமடித்தனர்.

சிறப்பாக பேட் செய்து வந்த கில் 110 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் புஜாரா 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் பார்னர்ஷிப் அமைத்த கோலி 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அணியின் ஸ்கோர் 2 விக்கெச் இழப்புக்கு 258 ரன்கள் என இருந்தது.

அப்போது இந்திய 512 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்திய கேப்டன் கேஎல் ராகுல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். இரண்டு நாள்கள் இருப்பதோடு, இன்றைய நாளில் 15 ஓவர் வரை மீதமிருக்க வங்கதேசத்துக்கு இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே நெருக்கடி தர வேண்டும் என கருதி இந்திய கேப்டன் டிக்ளேர் செய்த போதிலும் அது பலனளிக்காமல் போனது.

12 ஓவர்கள் இந்திய அணி பந்து வீசிய நிலையில் விக்கெட் இழப்பின்ற வங்கதேச அணி 42 ரன்கள் எடுத்தது. ஷாண்டோ 25, ஸாகிர் ஹசான் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேசத்துக்கு இந்தப் போட்டியை வெற்றி பெற இன்னும் 471 ரன்கள் தேவைப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்