தமிழ் செய்திகள்  /  Sports  /  Ind Vs Ban 1st Odi India First Innings Highlights

IND vs BAN 1st ODI Highlights: பொறுப்பில்லாத பேட்ஸ்மேன்கள்: 186 இந்தியா அவுட்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 04, 2022 02:40 PM IST

IND VS BAN 1st ODI India First Innings Score Details : ஒரு கட்டத்தில் இந்திய அணி 150 ரன்களை கடப்பதே பெரிய விசயமாக இருந்தது.

தனி ஒருவராக அரை சதம் கடந்து ஆறுதல் அளித்த கே.எல்.ராகுல்
தனி ஒருவராக அரை சதம் கடந்து ஆறுதல் அளித்த கே.எல்.ராகுல்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, இந்தியா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். துவக்கம் முதலே இந்திய வீரர்கள் வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட் வீழ்ந்த தருணம்
ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட் வீழ்ந்த தருணம்

ரோஹித் சர்மா 31 பந்தில் 21 ரன்களும், தவான் 17 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கிய கோலி 15 பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க. இந்தியா நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டது.

அதன் பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஷ் ஐயர், 39 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விக்கெட்டுகள் போய்க் கொண்டிருக்க, கே.எல்.ராகுல் அதிரடி காட்டத் தொடங்கினார்.

அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு தந்த வாஷிங்டன் சுந்தர் 43 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஷபஸ் அகமது டக் அவுட் ஆக, அவரை தொடர்ந்து வந்த ஷர்துல் தாகூரும் 2 ரன்களிலும், தீபக் சஹார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, 8 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

தவான் விக்கெட்டை வீழ்த்திய வங்கதேச பவுலர்
தவான் விக்கெட்டை வீழ்த்திய வங்கதேச பவுலர்

இருப்பினும் மறுபுறம் ராகுல் பொறுமையுடன் ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஜோடியாக இணைந்த முகமது சிராஜ் சிறிது நேரம் ஒத்துழைத்தார். ஒரு கட்டத்தில் விக்கெட் விழுந்து கொண்டிருக்க பொறுமை இழந்த ராகுல், அணியின் ரன் உயர்வுக்காக அதிரடியில் இறங்கினார். அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு விரட்ட நினைத்த அவர், 39.5 வது ஓவரில் இபாதத் ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  இதன் மூலம் 70 பந்தில் 73 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குல்தீப் சென், தனது முதல் இண்டர்நேஷன் போட்டியில் பேட்டிங்கை தொடங்கினார். 

இந்த ஜோடியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடிக்க நினைத்த முகமது சிராஜ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி  41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 

பங்களாதேஷ் தரப்பில் ஹஷிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், இமான் ஹூசன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹசன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்