Ind vs Aus 1st Odi: மேஜிக் நிகழ்த்திய இந்திய பெளலர்கள்! ஆஸி. 188 ரன்களில் காலி
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் கரீஸ் செட்டிலாக கொஞ்சமும் வாய்ப்பு அளிக்காமல் இந்தியா பெளலர்கள் மாயஜாலம் நிகழ்த்தினர். இதனால் நல்ல தொடக்கம் அமைந்தபோதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு பிறகு தற்போது மூன்று ஒரு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தனிப்பட்ட காரணத்தால் ரோஹித் ஷர்மா பங்கேற்காத நிலையில், இந்தியா அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார். இதையடுத்து டாஸ் வென்ற கேப்டன் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் ஆல்ரவுண்டர் பாண்ட்யா உள்பட மொத்த ஆறு பெளலர்கள் களமிறங்கினர்.
இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஹெட் 5 ரன்னில் வெளியேறினார். பின்னர் கேப்டன் ஸ்மித்துடன், ஓபனிங் பேட்ஸ்மேன் மிட்செல் மார்ஷ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்மித் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், அவருக்கு அடுத்தபடியாக வந்த ஸ்டார் பேட்ஸ்மேன் லபுஸ்சேன் 15 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.
மறுபுறம் அரைசதத்தை கடந்து மிட்செல் மார்ஷ் விளையாடி வந்தார். ஆரம்பம் முதலே அதிரிடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்ட வந்த மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அலெக்ஸ் கேரவுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலிஸ் கொஞ்சம் நிதானம் காட்டி 26 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக வந்த ஆல்ரவுண்டர்கள் கேமரூன் க்ரீன் 12, கிளென் மேக்ஸ்வெல் 8, மார்கஸ் ஸ்டொய்னில் 5 என ஏமாற்றினார்.
இதனால் முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா 35.4 ஓவரில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய பெளலர்களில் முகமது ஷமி தனது அற்புத பெளலிங்களால் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை நிலைகுலைய வைத்தார். சிறப்பாக பந்து வீசிய அவர் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவருடன் முகமத சிராஜ் 3, ஜடேஜா 2, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திகா பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். இந்திய பெளலர்களில் ஷர்துல் தாக்கூர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.