தமிழ் செய்திகள்  /  Sports  /  Icc Test Championship Final: Host Venues For 2023 And 2025 World Test Championship Finals Confirmed

ICC Test Championship final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான இடங்கள் அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 21, 2022 11:37 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த இரு முறையும் இங்கிலாந்து மைதானங்களிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானங்களை அறிவித்த ஐசிசி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானங்களை அறிவித்த ஐசிசி (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

வெள்ளைப் பந்து கிரிக்கெட் போல் டெஸ்ட் போட்டிகள் இல்லாமல் ஐந்து நாள்கள் நடைபெறுவதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஒரு தொடராக நடத்தாமல் இரண்டு ஆண்டுகள் சீசனில் குறிப்பிட்ட அணி விளையாடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொடர்களின் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டியை நடத்தும் விதமாக அட்டவணை அமைத்தது.

அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் கோப்பையை நியூசிலாந்து அணி வென்றது. இந்தியா - நியூசிலாந்து இடையே 2021ஆம் ஆண்டில் செளதம்டானில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2023இல் நடைபெற உள்ளது. இதன் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

தற்போதைய நிலையில் முதலாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. முறையே இரண்டு முதல் ஐந்தாவது இடம் வரை தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளன.

இதையடுத்து 2023 மற்றும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களுக்கான இறுதிப்போட்டி நடைபெறும் மைதானங்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி ஜூன் மாதத்தில் ஓவல் மைதானத்திலும், 2025ஆம் ஆண்டுக்கான இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் இங்கிலாந்தின் செளதாம்டானில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் இங்கிலாந்திலேயே நடைபெற இருக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்