Nicholas Pooran: இப்படியா செய்வது! நிக்கோலஸ் பூரானுக்கு அபராதம் விதித்த ஐசிசி
கயானாவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஐசிசி நடத்தை விதிமுறையை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியை வென்ற வெஸ்ட் இண்டீஸ் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அதிரடியாக பேட் செய்து 67 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.
இதையடுத்து இந்தப் போட்டியில் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விமர்சனம் செய்த குற்றத்துக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி நடத்தை விதிமீறல் லெவன் 1 குற்றத்தில் ஈடுபட்டதாக பூரானுக்கு, போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி முதலில் பேட் செய்தபோது, ஆட்டத்தின் 4வது ஓவரில், அம்பயர் நாட்அவுட் என முடிவு செய்த விஷயத்தில் வீரரின் ரிவியூவை வாய்ப்பின் முடிவை எடுத்ததற்காக வெளிப்படையாக விமர்சித்தார். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகள் 2.7இன் படி, வெளிப்படையாக போட்டி நடுவரை விமர்சிப்பது குற்றமாகும். இதனை செய்திருப்பதாக களநடுவர்கள் லெஸ்லி ரைபர், நைஜெல் டுகெட, மூன்றாம் நடுவர் கிரிகோரி பிராத்வெய்ட், நான்காவது நடுவர் பேட்ரிக் கஸ்ட்ராட், போட்டி ரெப்ரீ ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர் முன் வைத்த குற்றத்தை பூரான் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் மேற்கொண்டு விசாரணை செய்யப்படாமல் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பூரானுக்கு அபராதத்துடன், அவரது ஒழுங்குமுறைக்காக வழங்கப்படும் டிமெரிட் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக தவறு செய்தால், குறைந்தபட்ச அபராதமாக போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது ஒன்று முதல் இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்