தமிழ் செய்திகள்  /  Sports  /  Icc Officials To Discuss Pakistan's Participation In World Cup With Pcb

ICC: பாகிஸ்தானுக்கு நாளை செல்கிறது ஐசிசி உயரதிகாரிகள் குழு.. என்ன காரணம்?

Manigandan K T HT Tamil
May 29, 2023 05:17 PM IST

Pakistan Cricket Board: ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி வருகின்றன.

ஐசிசி அலுவலகம்
ஐசிசி அலுவலகம்

ட்ரெண்டிங் செய்திகள்

இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் உறவுகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் உறவில் விரிசல் விழுந்துள்ளது.

எனினும், ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி வருகின்றன.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. அந்தப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாங்களும் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தாண்டு பங்கேற்காமல் புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முரண்டு பிடித்து வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்த முன்வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸிம் சேதி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கூறியிருக்கிறார்.

ஆனால், பிசிசிஐ தரப்பில் இருந்து இதுதொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஐபிஎல் பைனல் நடக்கும் அன்று இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ கவுரவ செயலர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் தான் ஐசிசி உயரதிகாரிகள் நாளை பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஐசிசி பொது மேலாளர் வாசிம் கான் திங்களன்று ஒரு விர்ச்சுவல் வீடியோ மாநாட்டில் பங்கேற்று பேசுகையில், "இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பது தற்போது வெளிப்படையாக நடந்துகொண்டிருக்கும் ஒன்று. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

நேபாளம், பாகிஸ்தான், இந்தியா ஒரு குரூப்பிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றொரு குரூப்பிலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் உள்ளன.

இங்கிலாந்தில் ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. அந்த சமயத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான போட்டி அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்