தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cristiano Ronaldo: சிங்கிள் சீசனில் அதிக கோல்கள் அடித்து சாதனை! என்னை நோக்கி பின் தொடரும் சாதனைகள் - ரொனால்டோ

Cristiano Ronaldo: சிங்கிள் சீசனில் அதிக கோல்கள் அடித்து சாதனை! என்னை நோக்கி பின் தொடரும் சாதனைகள் - ரொனால்டோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 28, 2024 01:57 PM IST

முதல் பாதி முடிவதற்கு முன்னரும், பின் ஆட்டத்தின் 69வது நிமிடத்திலும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால சிங்கிள் சீசனில் அதிக கோல்கள் அடித்து தனித்துவ சாதனை புரிந்த அவர், சாதனைகளை பின் தொடர்வதில்லை, சாதனைகள் என்னை பின் தொடர்கின்றன என்று கூறியுள்ளார்.

சிங்கிள் சீசனில் அதிக கோல்கள் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை
சிங்கிள் சீசனில் அதிக கோல்கள் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக கிறியஸ்டியானோ ரொனால்டோ தனது எக்ஸ் பக்கத்தில், " நான் சாதனைகளை பின் தொடர்வதில்லை, சாதனைகள் தான் என்னை பின் தொடர்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டியானோ ரெனால்டோ சாதனை

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரெனால்டோ விளையாடி வரும் அல் நசர் அணி, 4-2 என்ற கோல் கணக்கில் அல் இத்திஹாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு முன் ஒரு கோல், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் மற்றொரு கோல் என இரண்டு கோல்களை அவர் அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 35 கோல்களை அடித்து, ஒரே சீசனில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்னர் 2018-19 சீசனில் மொரக்கா நாட்டை சேர்ந்த வீரரான அப்தர்ரஸாக் ஹம்தல்லாஹ் 34 கோல் அடித்தார். இதுவே ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிக கோலாக இருந்தது.

தற்போது இந்த சாதனையை நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார்.

50 கோல்கள் அடிப்பார்

இந்த சீசனில், ரொன்டோ விளையாடி வரும் அல் நசர் அணி தனது அடுத்த போட்டியில் அல் ஹிலால் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதையடுத்து ரொனால்ட் இந்த சீசனில் 50 கோல்கள் என்ற மைல் கல்லை எட்டவும் வாய்ப்பு இருப்பதாக பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

கடந்த 2022 டிசம்பரில், 37 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஆண்டுக்கு $75 மில்லியன் என ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரராக மாறினார்.

ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக இரண்டு முறை விளையாடியுள்ளார். கிளப்புடனான அவரது முதல் காலம் 2003-09 வரை நீடித்தது. அவர் 196 போட்டிகளில் பங்கேற்றார் மற்றும் தனது முதல் பதவிக்காலத்தில் கிளப்பிற்காக 84 கோல்களை அடித்தார். அவர் மூன்று பிரீமியர் லீக் பட்டங்களையும் அவர்களுடன் யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றார்.

ரியல் மாட்ரிட் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர், ரொனால்டோ 2009-2018 முதல் அணியுடன் தனது ஒன்பது நம்பமுடியாத வெற்றிகரமான சீசன்களில் இரண்டு லா லிகா சாம்பியன்ஷிப் மற்றும் நான்கு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்றுள்ளார் 292 போட்டிகளில், அவர் 311 கோல்களை அடித்துள்ளார். 2021-22 சீசனில் 40 ஆட்டங்களில் 19 கோல்கள் அடித்தார்.

ரொனால்டோ 2018-21 வரை ஜுவென்டஸில் மூன்று ஆண்டுகள் கழித்தார். ஜுவென்டஸ் அணிக்காக 98 போட்டிகளில் விளையாடி 81 கோல்கள் அடித்துள்ளார். அவர்களுடன், அவர் இரண்டு தொடர் ஏ (சிறந்த இத்தாலிய லீக்) பட்டங்களை வென்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்