Hyderabad E-Prix Cancelled: ஹைதராபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ ரேஸ் ரத்து! ஓப்பந்தம் மீறயதாக ஈ-பிரிக்ஸ் அறிக்கை-hyderabad e prix cancelled e prix alleging a contract breach by the new telangana government - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hyderabad E-prix Cancelled: ஹைதராபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ ரேஸ் ரத்து! ஓப்பந்தம் மீறயதாக ஈ-பிரிக்ஸ் அறிக்கை

Hyderabad E-Prix Cancelled: ஹைதராபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ ரேஸ் ரத்து! ஓப்பந்தம் மீறயதாக ஈ-பிரிக்ஸ் அறிக்கை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 06, 2024 08:08 PM IST

புதிய பொறுப்பேற்று இருக்கும் தெலங்கானா அரசு ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, ஹைதராபாத் இ-பிரிக்ஸை ரத்து செய்வதாக ஃபார்முலா இ அறிவித்துள்ளது.

ஹைதரபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ கார் பந்தயம் ரத்து
ஹைதரபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ கார் பந்தயம் ரத்து

ஹைதராபாத் நகருக்கு உலக அளவில் பிம்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக அமைந்திருந்த இந்த பந்தயம் ரத்து செய்யப்பட்டதற்கு, புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காங்கிரஸ் கட்சியின் பிற்போக்கு சிந்தனை காரணமாக அமைந்திருப்பதாக முந்தைய ஆட்சியாளராக இருந்த பிஆர்எஸ் கட்சியின் அமைச்சர் கேடி ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " ஹைதராபாத் நகரில் ஈ-பிரக்ஸ் போன்ற நிகழ்வுகள் மூலம் உலகம் முழுவதும் நகரின் மற்றும் நாட்டின் பிராண்ட் இமேஜ் மேம்படும். முதல் முறையாக இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் வைத்து இந்த போட்டியை நடத்துவதற்காக தனியாக நேரத்தை ஒதுக்கி பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று குறிப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த போட்டி ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து ஈ-பிரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்டோபர் 30, 2023 அன்று கையொப்பமிடப்பட்ட ஹோஸ்ட் சிட்டி ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடாது என்ற தெலங்கானா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் (MAUD) முடிவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.