HT Tamil Book SPL: விளையாட்டு வீரர்களுக்கான அரசின் திட்டங்கள் தெரிஞ்சிக்கணுமா.. அப்போ இந்த புக் படிங்க
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Tamil Book Spl: விளையாட்டு வீரர்களுக்கான அரசின் திட்டங்கள் தெரிஞ்சிக்கணுமா.. அப்போ இந்த புக் படிங்க

HT Tamil Book SPL: விளையாட்டு வீரர்களுக்கான அரசின் திட்டங்கள் தெரிஞ்சிக்கணுமா.. அப்போ இந்த புக் படிங்க

Manigandan K T HT Tamil
Jan 23, 2025 06:00 AM IST

HT Tamil Book SPL: இந்நூலில், விளையாட்டுத் துறையில் சாதித்துக் காட்டியவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதை நாம் படிக்கும்போது நமக்கு பெரிதும் உந்து சக்தியாக இருக்கும்.

HT Tamil Book SPL: விளையாட்டு வீரர்களுக்கான அரசின் திட்டங்கள் தெரிஞ்சிக்கணுமா.. அப்போ இந்த புக் படிங்க
HT Tamil Book SPL: விளையாட்டு வீரர்களுக்கான அரசின் திட்டங்கள் தெரிஞ்சிக்கணுமா.. அப்போ இந்த புக் படிங்க (karisalmedia)

இந்நூலை பிரேம்குமார் அசோகன், சந்திரப்பட்டி தி.அருணாசலம் ஆகியோர் தொகுத்துள்ளனர். கரிசல் மீடியா பதிப்பித்துள்ளது.

விளையாட்டுத்துறையில் நுழைந்துவிட்டால் இன்று பொருளாதார தன்னிறைவைப் பெற்றுவிட முடிகிறது. முந்தைய காலம் போல் இல்லை. இன்றைய காலகட்டத்தில் அனைத்து விளையாட்டுத் துறைகளும் முன்னேறி வருகின்றன. கிரிக்கெட் மட்டும்தான் என்றிருந்த காலம் போய், பேட்மின்டன், செஸ், கால்பந்து என பல விளையாட்டுகளில் இன்றைய இளைய சமுதாயத்தின் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நூலில், விளையாட்டுத் துறையில் சாதித்துக் காட்டியவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதை நாம் படிக்கும்போது நமக்கு பெரிதும் உந்து சக்தியாக இருக்கும்.

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த பல விளையாட்டுகளில் இன்றைய காலகட்டத்தில் பெண்களும் தடம் பதிக்கத் தொடங்கிவிட்டனர். பெண்கள் எப்போது விளையாட்டில் தடம் பதித்தார்கள் என்பது தொடர்பான ஒரு கட்டுரை சிறப்பாக உள்ளது.

ஒலிம்பிக் வரலாறு, ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்களிப்பு, கேலோ இந்தியா விளையாட்டு ஆகியவை குறித்து சிறப்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை வாசிக்கும்போது விளையாட்டுத் துறை குறித்து பார்வை விசாலமாகும்.

இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர்கள், தமிழகத்தில் இருந்து கிராண்ட்மாஸ்டர்கள், பெண் கிராண்ட்மாஸ்டர்கள் என தனித்தனியாக பட்டியலும் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வரலாறு, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள், விளையாட்டு வீரர்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அரிய தகவல்களும் இந்நூலில் உள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட வாரியான அலுவலர்களின் தொடர்பு எண்கள், எப்படி வீரர்களும் உதவுகிறது என்பது போன்ற சிறந்த தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்நூல், விளையாட்டு புதிதாக நுழைபவர்களுக்கு ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது. 

இந்நூலின் விலை ரூ.165. மொத்தம் 160 பக்கங்கள்.

மேம்பட்ட உடல் ஆரோக்கியம்: விளையாட்டுகளில் தொடர்ந்து பங்கேற்பது இளைஞர்கள் வலுவான தசைகள் மற்றும் எலும்புகளை வளர்க்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. இது உடல் பருமன், நீரிழிவு மற்றும் பிற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

உடல் செயல்பாடு எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது, இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு உணர்வுகளைக் குறைக்க உதவும். விளையாட்டு உணர்ச்சிகளை நேர்மறையான முறையில் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் அமைகிறது.

குறிப்பாக குழு விளையாட்டுகள் புதிய நண்பர்களை உருவாக்கவும் சமூக பிணைப்புகளை வலுப்படுத்தவும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இளம் விளையாட்டு வீரர்கள் ஒரு பொதுவான இலக்கை நோக்கி மற்றவர்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள், இது தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கிறது.

விளையாட்டுகளில் பங்கேற்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. விளையாட்டு மூலம் வளர்க்கப்படும் கவனம் மற்றும் ஒழுக்கம் சிறந்த நேர மேலாண்மை மற்றும் கல்வி செயல்திறனாக மாறும்.

குழு விளையாட்டுகள் பெரும்பாலும் சமூக உணர்வையும், சொந்த உணர்வையும் உருவாக்குகின்றன. இளம் விளையாட்டு வீரர்கள் பள்ளி அணியாக இருந்தாலும் சரி, உள்ளூர் கிளப்பாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய குழுவின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள், மேலும் பெரும்பாலும் குடும்பங்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து ஆதரவைப் பெறுகிறார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.