Paris Olympic 2024: பாரிஸில் மூன்றாவது முறை..! நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ஒலிம்பிக் - என்னென்ன மாற்றங்கள்
2024 ஒலிம்பிக் போட்டி பாரிஸில் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் இங்கு நடைபெற இருக்கிறது. 1924க்கு பிறகு தற்போது நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டி நூற்றாண்டு கொண்டாட்டமாக உள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்தது என்பதை பார்க்கலாம்
2024 ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. இரண்டு நாள்காள் முன்னரே சில விளையாட்டுகளின் ஆரம்ப போட்டிகள் போட்டிகள் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வு தொடக்க விழாவுடன் ஜூலை 26 தொடங்குகிறது. லண்டனுக்கு அடுத்தபடியாக மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரம் என்ற பெருமை பெறுகிறது பாரிஸ்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் 1900ஆம் ஆண்டில் ஒலிம்பிக் நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் வரலாற்றில் நடந்த இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாகும். இதன் பின்னர் 1924ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக இங்கு ஒலிம்பிக் நடந்தது. இதைத்தொடர்ந்து 100 ஆண்டுகள் கழித்து பாரிஸில் தற்போது நடைபெற இருக்கிறது.
பாரிஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் 2024 போட்டிகள் நூற்றாண்டு கொண்டாட்டமாக அமைகிறது. கடைசியாக பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தற்போது நடைபெற இருக்கும் போட்டிகளுக்கும் இடையே நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
நீண்ட அட்டவணையில் இருந்து மாற்றம்
பாரிஸ் ஒலிம்பிக் 1924ஐ பற்றி பேச தொடங்கினால் நினைவுக்கு வருவது அதன் நீளம் தான். இந்த ஒலிம்பிக் போட்டிகள் மே 4 முதல் ஜூலை 27 வரை 17 விளையாட்டு மற்றும் 126 பதக்க நிகழ்வுகளுடன் நடைபெற்று முடிவடைந்தது. சுமார் 2 மாதங்களுக்கு மேலாக இந்த ஒலிம்பிக் போட்டியானது நடந்தது. ஆனால் இந்த முறை இதற்கு நேர்மாறாக, ஒலிம்பிக் 2024 போட்டிகள் இரண்டு வாரங்களில் நடைபெற்று முடியவுள்ளன. இதில் மொத்தம் 32 விளையாட்டுகள் மற்றும் 329 பதக்க நிகழ்வுகளை விட இரு மடங்கு இடம்பிடித்துள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகள் மாற்றம்
1924இல் இடம்பெற்ற பெரும்பாலான விளையாட்டுகள் ஒலிம்பிக் 2024 போட்டிகளிலும் இடம்பிடித்துள்ளன. தடகளம், கால்பந்து, மல்யுத்தம் குத்துச்சண்டை உட்பட ஏறக்குறைய அனைத்து நிகழ்வுகளிலும் பெண்களுக்கான போட்டிகள் அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை.
கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை, ஒலிம்பிக் 1924 விளையாட்டு தான் அனைத்து வகையிலும் முதல் உலக சாம்பியன்ஷிப்பாகக் கருதப்படுகிறது. 1924 மற்றும் 1928ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டில் வென்ற பட்டங்கள், ஃபிபா அமைப்பு, உலகக் கோப்பை பட்டத்துக்கு சமமானதாக கருதுப்படுகிறது.
ஒலிம்பிக் 1924 போட்டிகளில் டென்னிஸ் விளையாட்டு இடம்பிடித்திருந்தது. இதன்பின்னர் 1988இல் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தான் டென்னிஸ் மீண்டும் இடம்பிடித்தது.
அத்துடன் 15 வீரர்கள் கொண்ட ரக்பி விளையாட்டானது கடைசியாக ஒலிம்பிக் 1924 போட்டிகளில் தான் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இந்த விளையாட்டு ரியோ 2016இல் ஏழு வீரர்கள் மட்டும் விளையாடும் விதமாக ரக்பி செவன்ஸ் என்ற பெயரில் மீண்டும் திரும்பியது.
ஒலிம்பிக் கிராமம்
ஒலிம்பிக் 1924 போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்ட முதல் நிகழ்வைாக அமைந்தது. ஒலிம்பிக் போட்டியை நடத்திய அமைப்பாளர்கள் மரக் குடிசைகளைக் கட்டி, ஸ்டேட் ஒலிம்பிக் டி கொலம்ப்ஸ் அருகே தங்குமிட மையத்தை நிறுவினர். இதை ஒலிம்பிக் கிராமம் என்று அழைத்தனர்,
பல்வேறு உலக அணிகள் ஒரே இடத்தில், ஒரே நிலைமைகளின் கீழ் தங்கும் சூழலை உருவாக்கி கொடுத்தது.
தற்போது நடைபெற இருக்கும் ஒலிம்பிக் 2024 போட்டிகளுக்கான கிராமம் பிரான்ஸ் தலைநகரின் மையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. இது 10 ஆயிரம் போட்டியாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அணிகள் மற்று்ம வீரர்களின் எண்ணிக்கை
ஒலிம்பிக் 1924 போட்டியில் 44 நாடுகளில் இருந்து 3,089 விளையாட்டு வீரர்கள் (135 பெண்கள் மற்றும் 2,954 ஆண்கள்) பங்கேற்றனர். ஈக்வடார், அயர்லாந்து, லிதுவேனியா, பிலிப்பைன்ஸ் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றன.
லாட்வியா மற்றும் போலந்து கோடைகால விளையாட்டுகளில் அறிமுகமான. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சாமோனிக்ஸ் குளிர்கால விளையாட்டுகளுக்கு விளையாட்டு வீரர்களை அனுப்பியது. 1924 விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 44 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் (என்ஓசி) பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன.
ஒலிம்பிக் 2024 போட்டிகளில் 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும், 200 நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்