தமிழ் செய்திகள்  /  Sports  /  Hockey World Cup 2023: South Korea Stuns Argentina And Qualifed For Quarter Finals

த்ரில் போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி தென் கொரியா காலிறுதிக்கு தகுதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 23, 2023 11:24 PM IST

Hockey World cup 2023: கடைசி வரை த்ரில்லாக சென்றுகொண்டிருந்த ஆட்டம் டிராவில் முடிய, பெணால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி தென்கொரியா அணி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

கோல் அடித்த மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தென் கொரியா அணி வீரர்  Jeong Junwooஜியோங் ஜுன்வூ
கோல் அடித்த மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தென் கொரியா அணி வீரர் Jeong Junwooஜியோங் ஜுன்வூ (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் பின்னர் இரண்டாவது பாதியில் மேலும் 2 கோல்கள் அடிக்க, பதிலுக்கு தென் கொரியா 2 கோல்கள் அடித்தது. இருப்பினும் அர்ஜெண்டினா 3-2 என முன்னிலையிலேயே இருந்தது. இதைத்தொடர்ந்து மூன்றாவது பாதியில் அர்ஜெண்டினா 1, தென் கொரியா 1 கோல்கள் அடிக்க மீண்டும் 4-3 என அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது.\

ஆட்டத்தின் இறுதி பாதி நேரத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் கொரிய வீரர்கள் 2 கோல்கள் அடிக்க, அர்ஜெண்டினா ஒரு கோல் மட்டுமே அடித்தது. கடைசி வரை த்ரில்லாக சென்ற இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவுற்றது.

இதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் கொரியா அணி 3-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தென் கொரியா அணி கால் இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

இன்று நடைபெற்ற மற்றொரு நாக்அவுட் ஆட்டத்தில் ஜெர்மனி அணி பிரான்ஸ் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழத்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்