Hockey World cup 2023:பெல்ஜியத்தை வீழ்த்திய ஜெர்மனி! 3வது முறையாக சாம்பியன்
ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஜெர்மனி.
15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் - ஜெர்மனி அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் முழு ஆட்ட நேர முடிவில் 4-4 என சமநிலை பெற்றது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது சாம்பியன் ஆனது. இந்த வெற்றியின் மூலம் ஜெர்மனி அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பைக்கு முத்தமிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இறுதிப்போட்டி என்பதால் பெல்ஜியம் - ஜெர்மனி ஆகிய இரு அணிகளும் தங்களது முழுமையான பலத்தை வெளிப்படுத்தும் விதமாகவே விளையாடின. முதல் பாதி முடிவதற்கு சில நிமிடங்கள் முன்பு பெல்ஜியம் அணி கோல் கணக்கை தொடங்கியது. இதையடுத்து முதல் பாதி முடிவில் 0-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாம் பாதியில் கொஞ்சம் சுதாரிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி அணி தனது முதல் கோல் அடித்தது. இருப்பினும் இரண்டாம் பாதி ஆட்ட நேர முடிவிலும் 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் முன்னிலையில் தொடர்ந்தது.
இதன்பின்னர் நடைபெற்ற ஆட்டத்தின் மூன்றாவது பாதி முடிவதற்கு 5 நிமிடங்கள் மீதம் இருக்கையில் ஜெர்மனி வீரர் தனது அணிக்கான இரண்டாவது கோல் அடித்தார். இதன் மூலம் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலை அடைந்தது.
இதைத்தொடர்ந்கு ஆட்டத்தின் நான்காவது மற்றும் கடைசி பாதியில் இரு அணிகளும் முன்னிலை பெறுவதற்கு முண்டியடித்து விளையாடின. அதற்கு கை மேல் பலனாக ஜெர்மனி, பெல்ஜியம் இந்த பாதியில் மட்டும் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். இதையடுத்து முழு ஆட்ட நேர முடிவில் 4-4 என்ற கணக்கில் டிராவில் முடிவுற்றது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பெல்ஜியம் வீரர் டாங்குய் கோசின்ஸ் கோல் அடிக்காமல் மிஸ் செய்த நிலையில், 5-4 என்ற கணக்கில் பெனால்டியில் வெற்றி பெற்றது ஜெர்மனி அணி. இதன் மூலம் 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் சாம்பியன் ஆனது.