Tamil News  /  Sports  /  Hockey World Cup 2023: Australia, Belgium Qualified For Semifinals
ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலியா வீரர்கள்
ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலியா வீரர்கள் (PTI)

Hockey world cup 2023: அரையிறுதிக்கு நுழைந்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம்

24 January 2023, 23:00 ISTMuthu Vinayagam Kosalairaman
24 January 2023, 23:00 IST

லீக் சுற்றில் சொதப்பினாலும் நாக்அவுட் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியை காலிறுதியில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் 12வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அத்துடன் மற்றொரு காலிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, தென் கொரியா அணிகள் நாக்அவுட் சுற்றில் விளையாடி வெற்றியுடன் தகுதி பெற்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கிய நிலையில் ஆஸ்திரேலியா - ஸ்பெயின், பெல்ஜியம் - நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் நடைபெற்றன.

இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியா அணி, தனக்கு எதிராக மோதிய அணிகளிடம் கோல் மழை பொலிந்து. இதுவரை அதிகபட்சமாக அந்த அணி 20 கோல்கள் அடித்துள்ளது.

ஸ்பெயின் அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றபோதிலும், நாக்அவுட் சுற்றில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - ஸ்பெயின் இடையிலான போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

பின்னர் இரண்டாவது பாதியில் ஸ்பெயின் 2 கோல்கள் அடித்து முன்னேறியது.ஆஸ்திரேலியா அணி ஒரு கோல் மட்டும் அடிக்க, மூன்றாவது சுற்று ஆட்டம் தொடர்ந்து. இந்த சுற்றில் விஸ்வரூபம் எடுத்த ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தனர். ஸ்பெயின் அணியினர் ஒரு கோல் மட்டுமே அடித்தனர்.

இதனால் மூன்றாவது பாதி முடிவில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசி பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலன் அளிக்கவில்லை. இறுதியில் முழு ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது.

இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 12வது முறையாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் நியூசிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

டாபிக்ஸ்