ஹாக்கி இந்தியா லீக்! பரபரப்பான போட்டி.. கிடைத்த போனஸ் புள்ளிகள்! ஷூட் அவுட்டில் லான்சர்ஸை வீழ்த்திய தமிழ்நாடு ட்ராகன்ஸ்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  ஹாக்கி இந்தியா லீக்! பரபரப்பான போட்டி.. கிடைத்த போனஸ் புள்ளிகள்! ஷூட் அவுட்டில் லான்சர்ஸை வீழ்த்திய தமிழ்நாடு ட்ராகன்ஸ்

ஹாக்கி இந்தியா லீக்! பரபரப்பான போட்டி.. கிடைத்த போனஸ் புள்ளிகள்! ஷூட் அவுட்டில் லான்சர்ஸை வீழ்த்திய தமிழ்நாடு ட்ராகன்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 04, 2025 11:43 PM IST

,ஹாக்கி இந்தியா லீக் தொடரில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் போனஸ் புள்ளிகளுடன் தமிழ்நாடு ட்ராகன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

லான்சர்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டி.. போனஸ் புள்ளிகளுடன் ஷூட் அவுட்டில் தமிழ்நாடு ட்ராகன்ஸ் வெற்றி
லான்சர்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டி.. போனஸ் புள்ளிகளுடன் ஷூட் அவுட்டில் தமிழ்நாடு ட்ராகன்ஸ் வெற்றி

இதையடுத்து இந்த தொடரில் தமிழ்நாடு ட்ராகன்ஸ் - வேதாந்தா கலிங்கா லேன்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ரூர்கேலா மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் பரபரப்பாக மோதிக்கொண்ட இந்த போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிவடைந்தது.

இதன் பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு ட்ராகன்ஸ் 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றதுடன், போனஸ் புள்ளிகளும் பெற்றது.

தமிழ்நாடு ட்ராகன்ஸ் வெற்றி

முதல் கால் பகுதி ஆட்டம் வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் லான்சர்ஸ் அணி 24வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. இதற்கு பதிலடி தரும் விதமாக 31வது நிமிடத்தில் தமிழ்நாடு வீரர் டாம் கிரேக் கோல் அடிக்க ஆட்டம் சமநிலை ஆனது.

பின்னர் 43வது நிமிடத்தில் லான்சர்ஸ் அணி இரண்டாவது கோல் அடித்தது. இதனால் ஆட்டம் சூடு பிடித்தது. வெற்றியை நோக்கி லான்சர்ஸ் அணி சென்று கொண்டிருக்க, தமிழ்நாடு வீரர் ஜிப் ஜான்சன் 51வது நிமிடத்தில் கோல் அடித்து திருப்புமுனை தந்தார்.

புள்ளிப்பட்டியலில் யார் டாப்

இந்த தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. டாப் 4 இடங்களில் யுபி ருத்ராஸ், ரார் பெங்கால் டைகர்ஸ், டெல்லி எஸ்ஜி பைப்பர்ஸ், தமிழ்நாடு ட்ராகன்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.

தமிழ்நாடு ட்ராகன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ட்ரா செய்திருக்கும் நிலையில் 3 புள்ளிகளை பெற்றுள்ளது. ஹைதராபாத் தூபான்ஸ், சூர்மா ஹாக்கி கிளப், டீம் கோனசிகா, கலிங்கா லான்சர்ஸ் ஆகிய அணிகள் கடைசி நான்கு இடங்களில் உள்ளன

ஹாக்கி இந்திய லீக் தொடர்

2013 முதல் நடைபெற்று வரும் இந்த தொடர் தொடர்ந்து 4 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் 2017க்கு பிறகு பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருந்து வந்தது. இதையடுத்து 7 ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

கடைசியாக 2017இல் நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் தொடரில் கலிங்கா லான்சர்ஸ் கோப்பை வென்றது. அதேபோல் பஞ்சாப் வாரியர்ஸ் அணி ஒரு முறை சாம்பியனாகவும், இரு முறை ரன்னர் அப்பாகவும் வந்தது

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.