கவுஹாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - இறுதிப்போட்டியில் 17 வயது அன்மோல் கர்ப்.. மகளிர் இரட்டையர் பிரிவுலும் கலக்கல்
கவுஹாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் 17 வயதாகும் அன்மோல் கர்ப் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவிலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கவுஹாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் அசாம் மாநிலம் கவுஹாத்தி நகரில் வைத்து நடைபெற்று வருகிறது. பிடபிளியூஎஃப் டூப் சூப்பர் 100 போட்டிகளில் ஒன்றாக இருந்து வரும் இந்த தொடர் டிசம்பர் 3 முதல் 8 வரை நடைபெறுகிறது
மகளிர் ஒற்றையர் பிரிவு
இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் 17 வயதாகும் அன்மோல் கர்ப். மற்றொரு இந்திய வீராங்கனையான மான்ஸி சிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 40 நிமிடம் நடைபெற்ற இருவருக்கும் இடையிலான மோதலில் 21-19, 21-17 என்ற நேர் செட்களில் அன்மோல் கர்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து இறுதிப்போட்டியில் சீனாவை சேர்ந்த ஹாய் யன் யன் என்பவரை எதிர்கொள்ள இருக்கிறார்.
மகளிர் இரட்டையர் பிரிவு
மகளிர் இரட்டையர் பிரவுக்கான அரையிறுதி போட்டியில் டாப் சீட் மற்றும் நடப்பு சாம்பியனான அஷ்வினி பொன்னப்பா, தனிஷா க்ராஸ்டோ ஜோடி 21-14, 21-14 என்ற செட் கணக்கில் சீனாவின் கெங் ஷு லியாங் மற்றும் வாங் டிங் ஜி ஜோடியை வீழ்த்தியது.