Chess : தேசிய செஸ் போட்டி- ராபிட் பிரிவில் தங்கம் வென்றார் கிராண்ட்மாஸ்டர் ப.இனியன்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Chess : தேசிய செஸ் போட்டி- ராபிட் பிரிவில் தங்கம் வென்றார் கிராண்ட்மாஸ்டர் ப.இனியன்

Chess : தேசிய செஸ் போட்டி- ராபிட் பிரிவில் தங்கம் வென்றார் கிராண்ட்மாஸ்டர் ப.இனியன்

Manigandan K T HT Tamil
Published Mar 22, 2025 08:03 PM IST

Chess : அதனை தொடர்ந்து டை பிரேக் முறையில் தமிழக வீரர் GM இனியன் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். GM பிரனேஷ் வெள்ளி மற்றும் GM ஷ்யாம் நிகில் வெண்கலமும் வென்றனர்.

Chess : தேசிய செஸ் போட்டி- ராபிட் பிரிவில் தங்கம் வென்றார் கிராண்ட்மாஸ்டர் ப.இனியன்
Chess : தேசிய செஸ் போட்டி- ராபிட் பிரிவில் தங்கம் வென்றார் கிராண்ட்மாஸ்டர் ப.இனியன்

11GM, 24 IM உட்பட 308 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 7 சுற்றுகளில் வெற்றி, 4 டிரா என 9 புள்ளிகளுடன் கிராண்ட்மாஸ்டர் இனியன் முதல் இடத்தை சமன் செய்தார்.

மற்றொரு தமிழக வீரர் GM பிரனேஷ், ரயில்வே வீரர்கள் GM ஷ்யாம் நிகில், GM திப்தயான் கோஷ் ஆகியோர் 9 புள்ளிகள் பெற்றனர்.

அதனை தொடர்ந்து டை பிரேக் முறையில் தமிழக வீரர் GM இனியன் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். GM பிரனேஷ் வெள்ளி மற்றும் GM ஷ்யாம் நிகில் வெண்கலமும் வென்றனர்.

முன்னதாக, பிரான்சின் கேன்ஸ் நகரில் 24.02.2025 முதல் 02.03.2025 வரை நடைபெற்ற "38வது கேன்ஸ் ஓபன் " சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் சாம்பியன் பட்டம் வென்றார். 6 GM, 21 IM உட்பட 25 நாடுகளை சார்ந்த 147 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் 6 சுற்றுகளில் 3 வெற்றி, 3 டிரா என 4.5 புள்ளிகளுடன் பின்தங்கி இருந்த இந்திய வீரர் இனியன் 7 மற்றும் 8 வது சுற்றில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முதல் இடத்தை சமன் செய்தார். அதனை தொடர்ந்து இறுதி சுற்றில் சக நாட்டு வீரர் GM ப்ரனேஷ்-ஐ வீழ்த்தி GM இனியன் முதல் இடம் பிடித்தார். இந்தியாவின் IM ஆராத்யா கார்க் 2வது இடமும், தற்போதைய உலக ஜூனியர் சாம்பியன் கசக்ஹஸ்தான் வீரர் GM கஸ்ய்பேக் நோன்ஜ்ர்பேக் 3ம் இடம் பிடித்தனர்.

யார் இந்த இனியன்?

ஈரோட்டை சேர்ந்தவரான இனியன் முழுப்பெயர் இனியன் பன்னீர் செல்வம். இந்தியா சார்பில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 71வது வீரராக உள்ளார். தற்போது சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே ரேட்டிங்கில் 2508 புள்ளிகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரான்ஸில் நடைபெற்ற லா-பிளாக்னே ஓபன் தொடரில் வெண்கலம் வென்றார். இதற்கு முன்னதாகவும் 2023இல் பிரான்ஸில் நடைபெற்ற கிரேயோன் ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள்

இந்திய செஸ் விளையாட்டின் தாயகமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இதற்கு காரணமாக இந்தியாவில் உள்ள 108 கிராண்ட் மாஸ்டர்களில் 37 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். 85 ஆண் கிராண்ட் மாஸ்டர்களில் 29 பேரும், 23 பெண் கிராண்ட் மாஸ்டர்களில் 8 பேரும் தமிழர்கள் தான்.

தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட் மாஸ்டர்கள் ஆனவர்களின் லிஸ்ட்: விஸ்வநாதன் ஆனந்த், சசிகிரண், ஆர்.பி.ரமேஷ், தீபன் சக்ரவர்த்தி, சுந்தர்ராஜன் கிடாம்பி, ஆர்.ஆர்.லட்சுமண், பி.மகேஷ் சந்திரன், எம்.ஆர்.வெங்கடேஷ், எஸ்.அருண் பிரசாத், பி.அதிபன், எஸ்.பி.சேதுராமன், எம்.ஷியாம் சுந்தர், வி.விஷ்ணு பிரசன்னா, கார்த்திகேயன் முரளி, வி.ஆர்.அரவிந்த் சிதம்பரம் மற்றும் அஸ்வின் ஜெயராம், கே.பிரியதர்ஷன், என்.நாத், ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ், பி.கார்த்திகேயன், என்.ஆர்.விசாக், இனியன்.ப, ஜி.ஆகாஷ், ஆர்.வைஷாலி ஆகியோர் உள்ளனர்.

Manigandan K T

TwittereMail
மணிகண்டன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 10 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம்.ஏ. அரசியல் அறிவியல் மற்றும் டிப்ளமோ ஜர்னலிசம் படித்துள்ள இவர், தினமணி நாளிதழ், நியூஸ் 7 தமிழ் மற்றும் ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.