GG vs DC: தலையில் கைவைத்து சோகமான டெல்லி வீராங்கனைகள்-குஜராத்துக்கு 2வது வெற்றி
WPL 2023: மகளிர் கிரிக்கெட் போட்டி மார்ச் 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிர் கிரிக்கெட் போட்டி மார்ச் 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 ஆட்டங்களில் 4 இல் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது.
முன்னதாக, இன்று இரவு 7.30 மணிக்கு வலிமையான டெல்லி கேபிட்டல்ஸும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லான்னிங், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் ஸ்னே ராணா தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி விளையாடியது.
தொடக்க வீராங்கனை சோஃபியா டங்லி 4 ரன்களில் நடையைக் கட்டினார். லாரா வோல்வார்ட் அரை சதமும், ஹர்லீன் தியோல் 31 ரன்களும் விளாசினர்.
ஆஷ்லி கார்ட்னர் அரை சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இவ்வாறாக குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது.
ஆரம்பம் முதலே தடுமாறிய டெல்லி அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
மெக் லான்னிங் 18 ரன்களில் நடையைக் கட்ட, ஷஃபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
காப் மட்டும் 36 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். அவரும் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
அருந்ததி ரெட்டியும் நம்பிக்கையுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி கட்டத்தில் குஜராத் ஃபீல்டிங்கும் மோசமாக இருந்தது.
எனினும், அருமையாக பந்துவீசி அனைத்து விக்கெட்டுகளையும் காலி செய்தது குஜராத்.
டாபிக்ஸ்